ஹோமியோபதி
எளிதானதா?..... எளிமையானதா?
ஹோமியோபதி மருந்து வாங்கச் சென்ற இடத்தில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க
ஒரு மருத்துவரை சந்தித்தேன். ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு ஹோமியோபதி மருந்துகள் வாங்கிக்
கொண்டிருந்தார். அத்தனையும் கூட்டு மருந்துகள்! RHMP மற்றும் RIMP மருத்துவப்
பதிவுகள் பெற்றிருப்பதாகக் கூறினார். அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் தனக்கு ஹோமியோபதி
மற்றும் சித்தா மருத்துவ முறைகள் தெரியும் என்றும், அதையும் தாண்டி அலோபதி நன்கு தெரியும்
என்றும் தெரிவித்தார். மேலும் அலோபதி மிகவும் எளியது என்றும் ஆனால் நான் பயன்படுத்த
முடியவில்லை என்றும், வருத்துத்துடன் கூறினார். ஹோமியோபதியில் ஏதோ கூட்டு மருந்துகள்
இருப்பதனால் தப்பிப் பிழைத்து இருப்பதாகவும் (அவரா? ஹோமியோபதியா?) என்று அங்கலாய்ப்புடன்
கூறினார். “ஏன் அலோபதி எளிதானது?” என்று நான் கேட்டதற்கு, அவர் ”அது ரொம்ப ஈஸி சார்..ஜுரம்னா
ஒரு மருந்து….வயத்தாலக்கு ஒரு மருந்து…என்று ஈசியா ஞபகம் வைத்துக் கொள்ளலாம்..” என்றார்.
அலோபதி போலவே ஹோமியோபதி செய்வதற்கு எளிமையானதாக் இருக்கிறது அவருக்கு!!
அவரின் கூற்றுப்படி ஹோமியோபதி கூட்டு மருந்துகளால் தப்பிப் பிழைத்திருக்கவில்லை.
கூட்டு மருந்துகளால் ஹோமியோபதியின் ஆன்மா அழிந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மையாக
ஒருவர் ஹோமியோபதி மருத்துவம் செய்ய வேண்டும் என்றால் அது எத்தனைக் கடினமானது என்பது
அந்த உண்மை ஹோமியோபதியருக்கு மட்டுமே புரியும்.
ஹோமியோபதி எளிதானதன்று. அதனைக் கையாள அதிகப்படியான பொறுமையும், கூர்ந்து
கவனிக்கும் ஆற்றலும், மிகச்சிறந்த நினைவாற்றலும், நீண்ட அனுபவமும் தேவைப்படுகிறது.
இந்த நோய்க்கு இந்த மருந்து என்று அலோபதியில் பரிந்துரைப்பது போன்று ஹோமியோபதியில்
பரிந்துரைக்க முடியாது. அப்படி செய்வது ஹோமியோபதியும் ஆகாது.
ஹோமியோபதி ”ஒரு வாழும் கலை,விஞ்ஞானம்’ அறிவியலுக்கு உரிய பகுத்தறிவோடும்
கலைக்கு உரிய நுனுக்கத்துடனும் ஒரு ஹோமியோபதி மருத்துவர் செயல்பட வேண்டும். அப்போதுதான்
அவருக்கு வெற்றிகள் எளிதாகும். ஹோமியோபதி மருத்துவத்திற்கு முழுமையான குணமாக்கும் ஆற்றலும்,
நோயை வேறோடு அறுத்தெரியும் அற்புதத் தன்மையும் உண்டு.
ஹோமியோபதி இயற்கியோடு இயைந்த, அவ்வியல்புக்கு எள்ளலவும் பிசகாத கொள்கைகளைக்
கொண்டது. ஹெர்ரிங் விதிகள், புரோஃபல் விஜயார்கரின் நோய் அமுக்கக் கோட்பாடு, சேகலின்
கழிவு நீக்க விதி முதலியவை, ஒரு நோய் நிலைமை (நோய் அல்ல!) எவ்வளவு ஆழமாக ஹோமியோபதி
பார்க்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
அவ்விதம் ஹோமியோபதி மருத்துவம் செய்ய துயரரை (நோயாளியை) தனித்துவப்
படுத்தல் அவசியம். அவ்விதம் தனித்துவப் படுத்துவதில்தான் ஹோமியோபதியின் பிரமிப்பு அடங்கியுள்ளது.
அதன் நுனுக்கங்களை ஆராயப் புகும் ஒருவர் அதன் பிரும்மாண்டத்தை உணர்கிறார்.
துயரரை (நோயாளியை) தனித்துவப் படுத்தல் அவசியம். அவ்விதம் தனித்துவப்
படுத்துவதில் நோய்க்குறிகள், உடனுறைக் குறிகள், மாறுமைகள், நோயாளியின் வரலாறு, அவர்தம்
குடும்ப நிலை, சூழல், குடும்பச் சூழல், அவரது சுபாவம், அப்போதய மனநிலை போன்றவைகளைக்
கணக்கிட்டு, மருந்தின் படமும் நோயாளியின் படமும் ஒத்துப் போகும் மருந்தைக் கண்டு, அதனை
உரிய வீரியத்தில் கொடுத்தால் மட்டுமே நோய் குணமாகும். அப்படி மருந்தைக் காணுவதற்கும்,
மருந்தின் வீரிய நிர்ணயம் செய்வதற்கும் எத்தனையோ முறைகள் உள்ளன. அத்தனையும் மனதில்
கொண்டு மருந்து தேர்வென்பது மிகக் கடின செயலாகவே இன்றுவரை கருதப்படுகிறது.
ஆகவே ஹோமியோபதி எளிதானதன்று!!!!
ஆனால்…..எளிமையானதா?
”இந்தியா போன்ற ஏழை எளிய மக்கள்
அதிகம் வசிக்கும் நாட்டில் ஹோமியோபதி மிகச் சிறந்ததும் பெரும்பான்மையான மக்களுக்கு
பயனளிக்கும் வகையிலும் உள்ளது” எனறு காந்தி அண்ணல் கூறுகிறார்.
மிகப்பெரிய ஹோமியோபதி மேதைகள் பலர் பணப்பலன் எதுவும் அதிகம் எதிர்பார்க்காமல்
மருத்துவத் தொண்டாற்றியுள்ளனர்.
மேஜர் தி. சா. ராஜூ, கோபிக்கர்
எனப்பலரும் இவ்வகையில் தொண்டாற்றியவர்கள். இன்றும் சிலர் குடத்திலிட்ட விளக்காய். பட்டுக்கோட்டை மருத்துவர், ஐயா காளிதாஸ் போன்றவர்கள்
ஹோமியோபதியை தொண்டாகச் செய்து
வருகின்றனர்.
அவ்வித எளிய மக்களுக்கான மருத்துவ முறையான ஹோமியோபதியை நடுத்தர மக்களின்
கைக்குகூட எட்டாத மருத்துவமாக மாற்றி வருகின்றனர் பலர். பெரிய பணக்காரர்களால் மட்டும்தான்
ஹோமியோபதி மருத்துவம் செய்துகொள்ள முடியும் எனற நிலை பெருகி வருகிறது.
ஒருபுறம் அலோபதி பன்னாட்டு மருத்துவமனை போன்ற தோற்றத்தில் கவர்ச்சிகரமான
விளம்பரங்களோடு தோன்றிக் கொண்டிருக்கும் ஹோமியோபதி(?) மருத்துவமனைகள்.
மறுபுறம் ஹோமியோபதியை எளிய மக்களின் எட்டாக்கனியாக்கும்,
ஒருமுறை மருந்து கொடுப்பதற்கே ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் மனசாட்சியற்ற புதிய மருத்துவர்கள்.
”ஹோமியோபதியில் மருந்து தேர்வு செய்வது அவ்வளவு எளிதா?
எத்தனை கஷ்ட்டப்பட வேண்டும்……அதற்குத்தான் இத்தனை பணம்..” என்றும்,
“
மற்ற மருத்துவ
முறைகளில் பல்லாயிரம் இழந்த பிறகுதானே நம்மிடம் வருகின்றனர்…ஹோமியோபதிக்காக சில ஆயிரங்கள்
செலவு செய்யக்கூடாதா?” என்றும்.
”மிகக் குறைவான பணத்திற்கு மருத்துவம் பார்த்தால்
மதிக்க மாட்டார்கள்” என்றும் -=- தனது செய்லகளுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு ஹோமியோபதி
மருத்துவர்கள் பலரும் உலாவி வருகின்றனர்.
இது போன்ற
காரணங்களால் ஹோமியோபதி மருத்துவம் அதன் எளிமையான தோற்றத்தை இழந்து வருகிறது. ஹோமியோபதி
எழை எளியோருக்கானது என்ற பிம்பமும் மங்கி வருகிறது.
எனவே ஹோமியோபதியை
அதன் பழம்பெருமையுடன் மீட்டெடுத்து, அதனை ஏழை எளிய பாட்டாளி வர்கத்தின் மருத்துவமாக்குவதை
கடமையெனச் செய்வோம்.
ஹோமியோபதி
எளிதன்று. ஆனால் எளிய மக்களுக்கானது!.
#########################################
Good point. But you must tell way of patients diagnosis methods. Or references books or class thank you
ReplyDeleteAnd nobody knows very well this type of classic homoeopathy
ReplyDeleteROH is popular in world wild. But in Tamil Nadu is ROH practitioners are very less.
ReplyDelete