Friday, March 2, 2018

R.O.H அனுபவங்கள்


R.O.H  அனுபவங்கள்

அனுபவம் 1.
20.12.2016

            துயரர் என்னுடன் ஆசிரியராகப் பணியாற்றும் 25 வயது ஆண்.

            ”என்ன உங்க தொந்திரவு….?”
            ”அடிக்கடி வயிறு முழுக்க எரியுதுங்க…..டீ, காபி சாப்பிட்டா உடனே தெரியுதுங்க எரிச்சல்…..”
            ”அப்புறம்……?”
            ”அதிகமா சாப்பிட்டாலும் எரியுது…..”….அதுக்காக சாப்பிடும்போது கூட ஜாக்கிரதையாகத்தான் சாப்பிடுவேன்…..”
            ”அப்புறம்…….?”
            ”எப்ப காரம் சாப்பிட்டாலும் வயிறு எரியுதுங்க…..” 
            ”வேற தொந்திரவுகள் ஏதாவது……..?’
            ”மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்லைங்க…..”
            ”எத்தனை நாளா இந்தப் பிரச்சனை இருக்கு….?
            ”ஒரு வருஷமாகவே இருக்கு சார்….”
            ”ஏதாவது வைத்தியம் பார்த்துகிட்டீங்களா….?
            ”ஒன்னும் வைதியம் ஏதும் செய்துக்கல……”
            ”ஏன்….?”
            ” இத ஒன்னும் பெரிசா எடுத்துக்கலைங்க…..”
            ”இப்ப ஏன்…..?
            ”அதை அப்படியே விட்டா சரியாகலையே…சார்…?”
            ”ஏன் ஹோமியோபதி வந்தீங்க……?
            ”சைடு எஃபக்ட் இருக்காதுன்னு சொல்றாங்க……எப்பவும் எங்க வீட்டுல  டாக்டர்கிட்ட போறது இல்ல…கைவைத்தியமாகவே அம்மா பார்த்துடுவாங்க…”

            தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:
MIND, Frivolous,
MIND, objective, reasonable
MIND, Delusions, imaginations - fire, sees,
MIND, Prejudice, traditional.
MIND, Fear, suffering, of,

Lachesis 30 ல் ஒரு வேளையும் தொடர் மருந்துகள் 15 நாட்களுக்கும் கொடுக்கபட்டன.
            மறு நாள் முதலே துயரர் தொந்திரவுகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். சில நாட்களில் முழுவதும் குணமாகி தற்போது வரை நலமாக உள்ளார்.
           
அனுபவம் 2.

            துயரர் 34 வயது தொழிலதிபர். ஆண். எனக்கு முன்பே அறிமுகம் இல்லாதவர்.
தொலைப்பேசியில்:
“ உங்கள பார்க்கனும்…எப்ப வரலாம்….?
            ”என்ன விஷயம்….யார் நீங்க….?
            ” நான் சீர்காழியில இருக்கேன்….பாண்டிச்சேரியில ஒரு ஃபேக்டரி வைச்சுருக்கேன்…சீர்காழி சொந்த ஊர்…..இப்ப இங்க வந்திருக்கேன்….உங்கள பார்க்கனும்….உடனே கிளம்பி வரலாமா…?”
            ”வாங்களேன்…. வீட்டுலதான் இருக்கேன்…..?”
            முகவரி தெரிந்து கொண்டு மனைவியுடன் காரில் வந்தார்.
            ”சோல்டர் பெயின்…..மஸ்குலர் பெயின்…..ரெண்டு பக்கமும் பயங்கரமா வலிக்குது…. இந்த மாதிரி முன்ன வந்தபோது பாண்டிச்சேரியில ஒரு ஹோமியோபதி டாக்டரிடம்தான் காட்டினேன்….ஒரு மருந்து கொடுத்தார்…..உடனே சரியாயிடுச்சு……ஒரு வருஷம் இருக்கும்…..இப்ப அதே மாதிரி இருக்கு…..”
            ” வேற…..?”
            தசையெல்லாம் டைட் ஆன மாதிரி இருக்கு…..கையைத் தூக்க முடியல….தலைவாரக்கூட முடியல…… கால் தசைக் கூட டைட் ஆக இருக்கிறது….“ என்று ஒவ்வொரு இடமாகத் தொட்டுக் கான்பித்தார்.
            வலியினால்….உஸ்….உஸ் என்று அரற்றினார்…….

தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:

            MIND, Anger interruption, form
          MIND, Gestures, Talking, gesticulation, while
          MIND, Delusions, legs, stiff as if

Nux Vomica 30 ல் ஒரு வேளை மருந்து தண்ணீரில் கலந்து கொடுக்கப்பட்டது.
சில வினாடிகளில் அவரது வலி குறைந்து, சில நிமிடங்களில் அவரது தசைகளில் ஏற்பட்ட இறுக்கம் மறைந்தது!.

இத்தகைய குணமாக்களை ROH முறையில் மட்டுமே நிகழ்த்த முடியும். அமரர் எஸ்.பி. விக்டர் ஐயா அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

%%%%%%%%%%%%%%%%%%%

No comments:

Post a Comment