Sunday, December 28, 2014

Ready Reckoner 1

அட நம்ம ரஸ்டாக்ஸ்தாங்க...!
17.11.14
            துயரர் எனக்கு மிகவும் அறிமுகமாவர்.  பொது நல அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்.  அந்த அமைப்பின் சார்பில் மாநில அளவிலான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்வது குறித்து என்னுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது,
            ” கிட்டத்தட்ட ஒரு வாரமா நாளா சளியாக இருக்கு(1)...... ஃபிரீயாவே இருக்க முடியல....மருந்து கொடுங்க....19 ஆம் தேதிக்குள்ள சரியாயிடனும்(2)........”  என்றார்.
            நான் மருந்து தேர்வு செய்து கொடுத்துவிட்டு, அவருடன் முகாம் செய்திகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். 
            சிறிது நேரத்தில்... “ சார்... என்ன மருந்து கொடுத்தீங்க....?....உள்ளுக்குள்ள ஏதோ கரையிற மாதிரி இருக்கு....நல்லா ரிலீஃபா இருக்குங்குக.....”என்றார்.
*         *        *         *        *         *          *
மீண்டும் அவரை நான் சந்தித்த போது,...’கீழ் முதுகுல லேசா வலி இருக்குங்க....” என்றார். ”யூரின் எப்படிப் போகுது......?”  என்று கேட்டேன் நான்.  “ நீங்க மருந்து கொடுத்த மறுநாள் கருப்பா ரெண்டு தரம் போச்சுங்க.... இப்ப நார்மலா இருக்கு...” என்றார். ”அப்படியா...நான் கொடுத்த மருந்தை மட்டும் (SL)சாப்பிடுங்க...இந்த முதுகுவலியும் சரியாயிடும்.....” என்று அவருக்கு சொல்லி மீண்டும் இரு நாட்கள் கழித்து அவரிடம் விசாரித்த்தில்....”ஒரு தொந்திரவும் இல்லை.....நன்றாக இருக்கிறேன்...” என்ற பதில் வந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:  (1)DELUSION, Injury, injured is being,
                                                  (2) CARRIED, Desire to be fast.
மருந்து......? அட நம்ம ரஸ்டாக்ஸ்   தாங்க...!
மேலிரண்டு குறிமொழிகளும் நாம் அடிக்கடி கணும் துயர் மொழிகள்: ரஸ்டாக்ஸ் 30 மேற்கண்ட துயர்ரை எளிமையாகவும், முழுமையாகவும் குணமாக்கியுள்ளது.  முதுகில் ஏற்பட்ட வலி, கருப்பான சிறுநீர் ஆகியவை கழிவு நீக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. துயரர் இந்நாள் வரை நலம்.
            இப்படிப்பட்ட Acute  நிலைகளில் Ready Reckoner போன்று குறிமொழிகளையும் மருந்துகளையும் இணைத்து நாம் குறிப்புகளை வைத்துக் கொண்டால் வெற்றிகள் நமதே.



1 comment: