Friday, August 17, 2018
Friday, March 2, 2018
திடீர்..திடீர் எனறு எழுந்து அழுகிறாள்…!
திடீர்..திடீர் என்று எழுந்து அழுகிறாள்…!
13.09.2011
என்னுடன்
பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் ஒன்றரை வயது மகள்.
“ சரியாகவே துங்க மாட்டேன்
என்கிறாள்....திடீர்..திடீர் என்று எழுந்து
அழுகிறாள்...என காரணமுன்னே தெரியல...டாக்டர்கிடா காட்டி மருந்தும்
கொடுத்து பார்த்துட்டேன்.....எங்க அம்மா, ’பயந்திருப்பாள்’ என்று சொல்கிறாங்க...”
உடனடியாக எனது மனதில் தோன்றிய
குறிமொழி “UnconCiousness
interreput by screaming”
Belladonna 30 ல் ஒரு வேளையும் மூன்று நாட்களுகுத் தொடர் மருந்துகளும் கொடுக்கப்பட்டன.
மறுநாள்
அவ் ஆசிரியயை என்னை சந்தித்த போது, “ என்ன மேஜிக் செய்தீங்க சார்.... நேற்று இரவு
நன்றாகத் தூங்கினள்.. அழவே இல்லை....ரோமப தேக்ஸ் சார்...” என்று தனது
மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
இதுபோன்ற
மிகச் சிறந்த தீர்வுகளை மிகக் குறுகிய காலத்திலெயே ஹோமியோபதியில் நிகழ்த்தமுடியும்
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் அமரர் திரு எஸ்.பி. விக்டர் அவர்கள். அதன் காரணம்
நாம் மனக் குறிகளைப் பயன்படுத்தும் விதம்.
ஹோமியோபதி எளிதானதா?..... எளிமையானதா?
ஹோமியோபதி
எளிதானதா?..... எளிமையானதா?
ஹோமியோபதி மருந்து வாங்கச் சென்ற இடத்தில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க
ஒரு மருத்துவரை சந்தித்தேன். ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு ஹோமியோபதி மருந்துகள் வாங்கிக்
கொண்டிருந்தார். அத்தனையும் கூட்டு மருந்துகள்! RHMP மற்றும் RIMP மருத்துவப்
பதிவுகள் பெற்றிருப்பதாகக் கூறினார். அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் தனக்கு ஹோமியோபதி
மற்றும் சித்தா மருத்துவ முறைகள் தெரியும் என்றும், அதையும் தாண்டி அலோபதி நன்கு தெரியும்
என்றும் தெரிவித்தார். மேலும் அலோபதி மிகவும் எளியது என்றும் ஆனால் நான் பயன்படுத்த
முடியவில்லை என்றும், வருத்துத்துடன் கூறினார். ஹோமியோபதியில் ஏதோ கூட்டு மருந்துகள்
இருப்பதனால் தப்பிப் பிழைத்து இருப்பதாகவும் (அவரா? ஹோமியோபதியா?) என்று அங்கலாய்ப்புடன்
கூறினார். “ஏன் அலோபதி எளிதானது?” என்று நான் கேட்டதற்கு, அவர் ”அது ரொம்ப ஈஸி சார்..ஜுரம்னா
ஒரு மருந்து….வயத்தாலக்கு ஒரு மருந்து…என்று ஈசியா ஞபகம் வைத்துக் கொள்ளலாம்..” என்றார்.
அலோபதி போலவே ஹோமியோபதி செய்வதற்கு எளிமையானதாக் இருக்கிறது அவருக்கு!!
அவரின் கூற்றுப்படி ஹோமியோபதி கூட்டு மருந்துகளால் தப்பிப் பிழைத்திருக்கவில்லை.
கூட்டு மருந்துகளால் ஹோமியோபதியின் ஆன்மா அழிந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மையாக
ஒருவர் ஹோமியோபதி மருத்துவம் செய்ய வேண்டும் என்றால் அது எத்தனைக் கடினமானது என்பது
அந்த உண்மை ஹோமியோபதியருக்கு மட்டுமே புரியும்.
ஹோமியோபதி எளிதானதன்று. அதனைக் கையாள அதிகப்படியான பொறுமையும், கூர்ந்து
கவனிக்கும் ஆற்றலும், மிகச்சிறந்த நினைவாற்றலும், நீண்ட அனுபவமும் தேவைப்படுகிறது.
இந்த நோய்க்கு இந்த மருந்து என்று அலோபதியில் பரிந்துரைப்பது போன்று ஹோமியோபதியில்
பரிந்துரைக்க முடியாது. அப்படி செய்வது ஹோமியோபதியும் ஆகாது.
ஹோமியோபதி ”ஒரு வாழும் கலை,விஞ்ஞானம்’ அறிவியலுக்கு உரிய பகுத்தறிவோடும்
கலைக்கு உரிய நுனுக்கத்துடனும் ஒரு ஹோமியோபதி மருத்துவர் செயல்பட வேண்டும். அப்போதுதான்
அவருக்கு வெற்றிகள் எளிதாகும். ஹோமியோபதி மருத்துவத்திற்கு முழுமையான குணமாக்கும் ஆற்றலும்,
நோயை வேறோடு அறுத்தெரியும் அற்புதத் தன்மையும் உண்டு.
ஹோமியோபதி இயற்கியோடு இயைந்த, அவ்வியல்புக்கு எள்ளலவும் பிசகாத கொள்கைகளைக்
கொண்டது. ஹெர்ரிங் விதிகள், புரோஃபல் விஜயார்கரின் நோய் அமுக்கக் கோட்பாடு, சேகலின்
கழிவு நீக்க விதி முதலியவை, ஒரு நோய் நிலைமை (நோய் அல்ல!) எவ்வளவு ஆழமாக ஹோமியோபதி
பார்க்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
அவ்விதம் ஹோமியோபதி மருத்துவம் செய்ய துயரரை (நோயாளியை) தனித்துவப்
படுத்தல் அவசியம். அவ்விதம் தனித்துவப் படுத்துவதில்தான் ஹோமியோபதியின் பிரமிப்பு அடங்கியுள்ளது.
அதன் நுனுக்கங்களை ஆராயப் புகும் ஒருவர் அதன் பிரும்மாண்டத்தை உணர்கிறார்.
துயரரை (நோயாளியை) தனித்துவப் படுத்தல் அவசியம். அவ்விதம் தனித்துவப்
படுத்துவதில் நோய்க்குறிகள், உடனுறைக் குறிகள், மாறுமைகள், நோயாளியின் வரலாறு, அவர்தம்
குடும்ப நிலை, சூழல், குடும்பச் சூழல், அவரது சுபாவம், அப்போதய மனநிலை போன்றவைகளைக்
கணக்கிட்டு, மருந்தின் படமும் நோயாளியின் படமும் ஒத்துப் போகும் மருந்தைக் கண்டு, அதனை
உரிய வீரியத்தில் கொடுத்தால் மட்டுமே நோய் குணமாகும். அப்படி மருந்தைக் காணுவதற்கும்,
மருந்தின் வீரிய நிர்ணயம் செய்வதற்கும் எத்தனையோ முறைகள் உள்ளன. அத்தனையும் மனதில்
கொண்டு மருந்து தேர்வென்பது மிகக் கடின செயலாகவே இன்றுவரை கருதப்படுகிறது.
ஆகவே ஹோமியோபதி எளிதானதன்று!!!!
ஆனால்…..எளிமையானதா?
”இந்தியா போன்ற ஏழை எளிய மக்கள்
அதிகம் வசிக்கும் நாட்டில் ஹோமியோபதி மிகச் சிறந்ததும் பெரும்பான்மையான மக்களுக்கு
பயனளிக்கும் வகையிலும் உள்ளது” எனறு காந்தி அண்ணல் கூறுகிறார்.
மிகப்பெரிய ஹோமியோபதி மேதைகள் பலர் பணப்பலன் எதுவும் அதிகம் எதிர்பார்க்காமல்
மருத்துவத் தொண்டாற்றியுள்ளனர்.
மேஜர் தி. சா. ராஜூ, கோபிக்கர்
எனப்பலரும் இவ்வகையில் தொண்டாற்றியவர்கள். இன்றும் சிலர் குடத்திலிட்ட விளக்காய். பட்டுக்கோட்டை மருத்துவர், ஐயா காளிதாஸ் போன்றவர்கள்
ஹோமியோபதியை தொண்டாகச் செய்து
வருகின்றனர்.
அவ்வித எளிய மக்களுக்கான மருத்துவ முறையான ஹோமியோபதியை நடுத்தர மக்களின்
கைக்குகூட எட்டாத மருத்துவமாக மாற்றி வருகின்றனர் பலர். பெரிய பணக்காரர்களால் மட்டும்தான்
ஹோமியோபதி மருத்துவம் செய்துகொள்ள முடியும் எனற நிலை பெருகி வருகிறது.
ஒருபுறம் அலோபதி பன்னாட்டு மருத்துவமனை போன்ற தோற்றத்தில் கவர்ச்சிகரமான
விளம்பரங்களோடு தோன்றிக் கொண்டிருக்கும் ஹோமியோபதி(?) மருத்துவமனைகள்.
மறுபுறம் ஹோமியோபதியை எளிய மக்களின் எட்டாக்கனியாக்கும்,
ஒருமுறை மருந்து கொடுப்பதற்கே ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் மனசாட்சியற்ற புதிய மருத்துவர்கள்.
”ஹோமியோபதியில் மருந்து தேர்வு செய்வது அவ்வளவு எளிதா?
எத்தனை கஷ்ட்டப்பட வேண்டும்……அதற்குத்தான் இத்தனை பணம்..” என்றும்,
“
மற்ற மருத்துவ
முறைகளில் பல்லாயிரம் இழந்த பிறகுதானே நம்மிடம் வருகின்றனர்…ஹோமியோபதிக்காக சில ஆயிரங்கள்
செலவு செய்யக்கூடாதா?” என்றும்.
”மிகக் குறைவான பணத்திற்கு மருத்துவம் பார்த்தால்
மதிக்க மாட்டார்கள்” என்றும் -=- தனது செய்லகளுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு ஹோமியோபதி
மருத்துவர்கள் பலரும் உலாவி வருகின்றனர்.
இது போன்ற
காரணங்களால் ஹோமியோபதி மருத்துவம் அதன் எளிமையான தோற்றத்தை இழந்து வருகிறது. ஹோமியோபதி
எழை எளியோருக்கானது என்ற பிம்பமும் மங்கி வருகிறது.
எனவே ஹோமியோபதியை
அதன் பழம்பெருமையுடன் மீட்டெடுத்து, அதனை ஏழை எளிய பாட்டாளி வர்கத்தின் மருத்துவமாக்குவதை
கடமையெனச் செய்வோம்.
ஹோமியோபதி
எளிதன்று. ஆனால் எளிய மக்களுக்கானது!.
#########################################
R.O.H அனுபவங்கள்
R.O.H அனுபவங்கள்
அனுபவம் 1.
20.12.2016
துயரர் என்னுடன் ஆசிரியராகப் பணியாற்றும் 25 வயது ஆண்.
”என்ன உங்க தொந்திரவு….?”
”அடிக்கடி வயிறு முழுக்க எரியுதுங்க…..டீ, காபி சாப்பிட்டா உடனே
தெரியுதுங்க எரிச்சல்…..”
”அப்புறம்……?”
”அதிகமா சாப்பிட்டாலும் எரியுது…..”….அதுக்காக சாப்பிடும்போது
கூட ஜாக்கிரதையாகத்தான் சாப்பிடுவேன்…..”
”அப்புறம்…….?”
”எப்ப காரம் சாப்பிட்டாலும் வயிறு எரியுதுங்க…..”
”வேற தொந்திரவுகள் ஏதாவது……..?’
”மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்லைங்க…..”
”எத்தனை நாளா இந்தப் பிரச்சனை இருக்கு….?
”ஒரு வருஷமாகவே இருக்கு சார்….”
”ஏதாவது வைத்தியம் பார்த்துகிட்டீங்களா….?
”ஒன்னும் வைதியம் ஏதும் செய்துக்கல……”
”ஏன்….?”
” இத ஒன்னும் பெரிசா எடுத்துக்கலைங்க…..”
”இப்ப ஏன்…..?
”அதை அப்படியே விட்டா சரியாகலையே…சார்…?”
”ஏன் ஹோமியோபதி வந்தீங்க……?
”சைடு எஃபக்ட் இருக்காதுன்னு சொல்றாங்க……எப்பவும் எங்க வீட்டுல டாக்டர்கிட்ட போறது இல்ல…கைவைத்தியமாகவே அம்மா பார்த்துடுவாங்க…”
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:
MIND, Frivolous,
MIND, objective, reasonable
MIND, Delusions,
imaginations - fire, sees,
MIND, Prejudice,
traditional.
MIND, Fear, suffering, of,
Lachesis
30 ல் ஒரு வேளையும் தொடர் மருந்துகள்
15 நாட்களுக்கும் கொடுக்கபட்டன.
மறு
நாள் முதலே துயரர் தொந்திரவுகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். சில நாட்களில் முழுவதும்
குணமாகி தற்போது வரை நலமாக உள்ளார்.
அனுபவம் 2.
துயரர் 34 வயது தொழிலதிபர். ஆண். எனக்கு முன்பே அறிமுகம் இல்லாதவர்.
தொலைப்பேசியில்:
“ உங்கள பார்க்கனும்…எப்ப
வரலாம்….?
”என்ன விஷயம்….யார் நீங்க….?
” நான் சீர்காழியில இருக்கேன்….பாண்டிச்சேரியில ஒரு ஃபேக்டரி
வைச்சுருக்கேன்…சீர்காழி சொந்த ஊர்…..இப்ப இங்க வந்திருக்கேன்….உங்கள பார்க்கனும்….உடனே
கிளம்பி வரலாமா…?”
”வாங்களேன்…. வீட்டுலதான் இருக்கேன்…..?”
முகவரி தெரிந்து கொண்டு மனைவியுடன் காரில் வந்தார்.
”சோல்டர் பெயின்…..மஸ்குலர் பெயின்…..ரெண்டு பக்கமும் பயங்கரமா
வலிக்குது…. இந்த மாதிரி முன்ன வந்தபோது பாண்டிச்சேரியில ஒரு ஹோமியோபதி டாக்டரிடம்தான்
காட்டினேன்….ஒரு மருந்து கொடுத்தார்…..உடனே சரியாயிடுச்சு……ஒரு வருஷம் இருக்கும்…..இப்ப
அதே மாதிரி இருக்கு…..”
” வேற…..?”
தசையெல்லாம் டைட் ஆன மாதிரி இருக்கு…..கையைத் தூக்க முடியல….தலைவாரக்கூட
முடியல…… கால் தசைக் கூட டைட் ஆக இருக்கிறது….“ என்று ஒவ்வொரு இடமாகத் தொட்டுக் கான்பித்தார்.
வலியினால்….உஸ்….உஸ் என்று அரற்றினார்…….
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:
MIND, Anger
interruption, form
MIND, Gestures, Talking,
gesticulation, while
MIND, Delusions, legs, stiff as if
Nux Vomica
30 ல் ஒரு வேளை மருந்து தண்ணீரில்
கலந்து கொடுக்கப்பட்டது.
சில வினாடிகளில் அவரது வலி குறைந்து,
சில நிமிடங்களில் அவரது தசைகளில் ஏற்பட்ட இறுக்கம் மறைந்தது!.
இத்தகைய குணமாக்களை ROH முறையில்
மட்டுமே நிகழ்த்த முடியும். அமரர் எஸ்.பி. விக்டர் ஐயா அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.
%%%%%%%%%%%%%%%%%%%
குறிகளின் முழுமை (Totality of Symptoms)
குறிகளின் முழுமை (Totality of Symptoms)
ஹோமியோபதி
மருந்துத் தேர்வில் முக்கியமானது துயரர் ஆய்வு. துயரர் ஆய்வில் துயரர்
வெளிப்படுத்தும் ஒட்டு மொத்த மனக்குறிகளின் மூலமே
தக்க மருந்தளித்தால்தான் நலமாக்கல் மென்மையாகவும் விரைவாகவும்
நிரந்திரமாகவும் நடைபெறுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ROH–முறையில் நாம் நிலைத்து, நீடித்து, நிலையாதிக்கம் செய்கின்ற குறிகளின் தொகுப்பில்
சுட்டிக்காட்டப்படும் மருந்தை நாம் தேர்வு செய்வது மிகவும் அவசியமானதாகும்.
அப்படியில்லாமல் துயரர் வெளிப்படுத்திய நமக்கு மிகவும் பழக்கமான ஒற்றைக் மருந்துக்
குறியை நாம் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு மருந்தளித்தால், அது துயரரின்
குறிகளின் முழுமையை சுட்டாத போது நலமாக்கல் பகுதியாகவோ, நலமாக்கல் இன்மையோதான்
நடைபெறுகிறது என்பது எனது சமீபத்திய அனுபவம்.
சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணவிழாவிற்கு
குடும்பத்துடன் சென்றிருந்தேன். வெளியில் செல்லும்போது நான் எப்போதும் ஹோமியோபதி
மருந்துகள் அடங்கிய சிறிய பெட்டி ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கம்.
அத்திருமண
விழாவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி மூட்டு வலியால் அவதிப்படுவதாக் என்
மனைவீயால் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரிடம் பேசியபோது:-
”ரெண்டு
மூனு மாசமா இரெண்டு கால் மூட்டிலேயும் வலி....”
”ம்..
சொல்லுங்க....”
”நடக்கும்போது
மரமரன்னு சப்தம் கேட்குது....உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல.... உள்ள
எலும்புக்குள்ள வலிச்சுகிட்டே இருக்கு...’
”அப்படியா...?
”ரெண்டு
முட்டியும் அப்படியே வீங்கி இருக்கிறது மாதிரி தோனுது....”
ஆனால் அவரது கால்
முட்டியில் வீக்கம் ஏதும் இல்லை...கிடைத்தது குறிமொழி என்று(!) உற்சாகமானேன். எனது
மருந்துப் பெட்டியில் அகோனைட் மருந்து நிச்சயம் இருக்கும்,. எனவே
Delusions, body parts are deformed என்ற குறிமொழியில் உள்ள ஒரே
மருந்தான Aconite-ல் 30 வீரியத்தில் ஒரு வேளையும்
மூன்று நாட்களுக்கு தொடர் மருந்துகளும் கொடுத்தேன்.
இங்கு
துயரர் வெளிபடுத்திய மற்றக் குறிகளான 1. Anger, contradiction form.
2. Fear of
Sufferings 3. Delusions, injured, is
being போன்ற குறிகள் வசதியாக மறக்கப்பட்டன.
மருந்து கொடுத்த சில நிமிடங்கள் கழித்து, அப்பெண்மணி,
வீங்கினாமாதிரி இருந்தது இப்ப இல்ல.. .. ஆனா வலி
இருந்துகிட்டே இருக்கு…” என்றார். “ தொடர்ந்து
மருந்து சாப்பிடுங்க .. வலியும் சரியாயிடும்…..” என்ற பதில் கூறி எனது கைப்பேசி எண்னைக் கொடுத்து வந்தேன்.
நான் எதிர்பாராத வகையில் அந்தத் துயரரிடமிருந்து மூன்று நாட்கள் கழித்து அழைப்பு
வந்தது. “ வலி அப்படியேதான்
இருக்கு…வலிச்சுகிட்டே இருக்கு….கொஞ்சம்
கூட குறையவில்லை…உட்கார்ந்தா எழுந்திருக்க முடியவில்லை…நடக்கும்போது ‘மரமரன்னு’ சப்பதம்
மூட்டிலிருத்து வருது….” என்றார். கூரியரில் வேறு மருந்து அனுப்புவதாகக்
கூறி, சிந்தனையில் ஆழ்ந்தேன்.
துயரர் அப்போது கூறியவற்றையும் தற்போது கூறியவற்றையும் மீண்டும் நினைவு கூர்ந்தேன்.
1. Anger, contradiction form.
2. Fear of Sufferings
3.
Delusions, injured, is being போன்ற குறிகள் அப்படியே இருந்தன.
அவசரப்பட்டு Delusions, body parts are deformed என்ற குறியின்
அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுத்த்து பகுதியாக அம்மனநிலையை மட்டுமே மாற்றியிருக்கிறது.
துயரை முழுமையாகக் குணப்படுத்தவில்லை என்பது புலனாகிறது.
எனவே மேற்கண்ட மூன்று குறிமொழிகளே இங்கு PPP ஆக
நிலைத்துள்ளது. மேலும் அவரிடம் Carried, desire to be என்ற
மனநிலையும் காணப்பட்டதால் அந்த நான்கு குறிமொழிகளையும் உள்ளடக்கிய Bryonia வில் 30ல் ஒரு வேளைக்கும் தொடர் மருந்துகள் 15 நாட்களுக்கும்
அனுப்ப்பட்டன.
நான்கு
நாட்களுக்குபின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அப்பெண்மணி வலி பெருமளவில்
குறைந்திருப்பதாக்க் கூறினார். துயரர் தற்போது தொடர் கண்காணிபில் உள்ளார்.
எனவே
எம்முறையை அனுசரித்து மருந்தளித்தாலும் (Classical or ROH) துயர்க் குறிகளின் முழுமையை (Totality of Symptoms)
அனுசரித்துக் கொடுக்கும் மருந்தே பூரண நலனை ஏற்படுத்துகிறது என்பதே மேற்கண்ட
அனுபவம் உணர்த்துகிறது.
ஹோமியோபதியும் அறிவியலும்
ஹோமியோபதியும் அறிவியலும்
ஹோமியோபதி
அறிவியலாகுமா…..? என்ற வினா அவ்வப்போது எழுப்பப்படுவதுண்டு. அது மிகப்பெரிய சர்ச்சையாக
உருவெடுக்கும்.. ஹோமியோபதியர் ஹோமியோபதிக்கு ஆதரவாகவும், அறிவியலார் எனக் கூறிக்கொள்பவர்
சிலர் ஹோமியோபதிக்கு எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவு செய்வர். அத்தோடு அச்சர்ச்சை
அடங்க்கிவிடும். இது ஹானிமன் அவர்கள் ஹோமியோபதியை ஒரு மருத்துவ முறையாக அறிவித்த நாள்
முதல் நடைமுறையில் உள்ளது.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஹோமியோபதி
மருந்துகளின் ஆற்றலைக் கணக்கிடும் கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட
செய்திக்ளும், ஏதோ ’பறக்கும் தட்டு பூமியில் இறங்கியது போன்ற’ ஒரு ஆதாரமற்ற செய்திகளாகவே
உள்ளன. பரவலாக நடைமுறைக்கு வந்தபாடில்லை.
இருந்தபோதிலும் ஹோமியோபதியயை அறிவியலுடன்
தொடர்புபடுத்துத்தும் ஆய்வுகள் அங்கங்கே மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. அவ்வகையில் ஹோமியோபதியை
நவீன அறிவியல் முறையான நானோ தொழிற்நுட்பத்துடன் தொடர்புபடுத்தி வரும் பதிவுகள் ஹோமியோபதியர்களுக்கு
உற்சாகமூட்டுவதாக உள்ளன. ‘
சமீபத்தில்
மும்பை ஐ.ஐ.டி யின் முனைவர்கள் திரு பிராஷாத் சிகர்மே, திரு. ஏ.கே. சுரேஷ், திரு.
எஸ்.ஜி. கானே மற்றும் திரு ஜெயேஷ் பாலரே ஆகியோர் செய்த ஆய்வில், அதிக அளவு வீரியப்படுத்தப்பட்ட
தாதுக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹோமியோபதி
மருந்துகளில் ( high potency
(highly diluted) homeopathic remedies made from metals) அளவிக்கூடிய அளவில் அம்மருந்துகளின்
மூலப்பொருட்களின் தன்மை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்துள்ளனர்.
பொதுவக
இதற்கு முன் நம் அறிவியலார் பலரும் அவகேட்ரா
விதிப்படி ஹோமியோபதி மருந்துகளில் 12C வீரியங்களுக்கு மேல் உள்ள மருந்துகளில் மூல மருந்தின்
மூலக்கூறுகள் ஏதும் இருக்காது என்றே சொல்லி வந்தனர். (Specifically, if the starting material is at
one molar concentration (6.023x10e23 molecules per liter), then at about the
12th dilution (12C) there should be no or very nearly no molecules left of the
starting material). 200c
வீரியப்படுத்தப்பட்ட மருந்தில் மூல மருந்தின் மூலக்கூறுகள் இருக்கவே இருக்காது என்பது
அவர்களின் வாதம்.
ஆனால் ஐ.ஐ.டி.
பேராசிரியர்களின் எலக்ட்ரான் மைக்ராஸ்கோபி
(TEM) எலக்ட்ரான் டிஃப்ராக்ஷன் மற்றும் அணு செப்ரோகோபி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் மேற்கண்ட அவோகேட்ரா கோட்பாட்டிற்கு முரணாக உயர் வீரிய மருந்துகளிலும் மிக நுண்ணிய
மூலமருந்தின் கூறுகள் உள்ளன என்பதும் தெளிவாகிறது.(nanogram quantities of the starting material still
present in these ‘high potency’).
ஹோமியோபதி
மருந்துகளின் ஆற்றலை, குறிப்பக உயர் வீரிய மருந்துகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் மேற்கண்ட
ஆய்வு ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படவேண்டும். ஹோமியோபதியை உணரும் அளவிற்கு அறிவியல் தற்போதுதான்
வளர்ந்திருக்கிறது என்பதை நாமக்கு உணர்த்துவதாகவே இத்தகைய ஆய்வுகள் உள்ளன.
இருநூற்று
ஐம்பது வருடங்களுக்கு முன், எவ்வித அறிவியல் முன்னேற்றமும் காணாத காலத்தில் கண்டறியப்பட்ட ஒரு மருத்துவ முறை தற்போதய நவீன அறிவியலால்
நிரூபிக்கப்படுகிறது. இதன் மூலமே ஹோமியோபதியைக் கண்டறிந்த மாமேதை. ஹானிமனின் அறிவுக்கூர்மையையும்,
தீர்க்க தரிசனத்தையும் நாம் வியக்கலாம்.
அறிவியல்
காலங்காலமாக மறிக்கொண்டே வருகிறது. முன்பு சொல்லப்பட்ட கோட்பாடுகள் அடுத்தடுத்து வரும்
அறிவியலர்களால் கேள்விகுள்ளாக்கப்படுகிறது. ஆனால் ஹோமியோபதி என்றும் மாறாத கோட்பாடுகளால்
கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பல புதிய தொழிற் நுட்பங்களினால்
ஹோமியோபதி மீண்டும் மீண்டும் நிருபிக்கப்டும் என்பதே உண்மை.
மாமேதை
ஹானிமன் பிறந்த இம்மாதத்தில் (ஏப்ரல் 10) ஹானிமன் அவர்களின் கொள்கைக்கு அணி சேர்க்கும்
இக்கட்டுரையை ஞானமருத்தும் இதழின் மூலம் வெளியிடப்படுவதில் பெருமை கொள்கிறேன்.
”காலங்கள் மாறும்,
காட்சிகள் மாறும்,
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்..!”
-- கவிஞர் உமர்கையம்.
நம்பிக்கையுடன் ஹோமியோபதி பணியாற்றுவோம். உலகை நல்
வழிப்படுத்துவோம்.
Subscribe to:
Comments (Atom)
-
அட நம்ம ரஸ்டாக்ஸ்தாங்க...! 17.11.14 துயரர் எனக்கு மிகவும் அறிமுகமாவர். பொது நல அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர...
-
என்றென்றும் ஹோமியோபதி ஹோமியோபதியில் கோடைக்கால நோய்களுக்கான மருந்துகள் குறித்து ஒரு கட்டுரை எழுத நண்பர் பணித்தார். ...
-
ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு ஹோமியோபதியில் மருந்து நிர்ணயம் செயும் முறை எத்தனை முக்கியமானதோ, அதே அளவு முக்கியத்...