Friday, December 26, 2014

R.O.H –ஐ புரிந்து கொள்வோம்


R.O.H –ஐ புரிந்து கொள்வோம்


     அமரர் டாக்டர் S.P. விக்டர் அவர்களின் பெருமுயற்சியால் Dr.M.L. சேகல் அவர்கள் கண்டுபிடித்த R.O.H முறை தமிழ்நாட்டில் வேரூன்றி நன்கு பரவியுள்ளதை நாம் மறுக்க முடியாது. தற்போதும் அவரது சீடர்கள் R.O.H ஐ தங்களால் இயன்ற அளவு பரப்பவும் போதிக்கவும் முயற்சிகள் செய்து வருவது பாராட்டுக்குறியது.

      எந்த ஒரு துறையிலும் அதன் வீச்சையும் ஆழத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டாலன்றி அதில் வெற்றிபெறுவது இயலாது. அவ்வாறு புரிந்து கொண்டவர்களுக்கு அக்குறிப்பிட்ட பணி மிக எளிதாகிறது.

      உதாரணமாக கணிதத்தில் ‘இயற்கணிதம்(ALGEBRA) எனற் பாடப்பிரிவை அனைவரும் அறிவோம். அதன் அடிப்படைகளை புரிந்து கொண்டவர்களுக்கு இயற்கணித்தைப் போன்று எளிய கணக்குப் பிரிவு எதுவும் இல்லை. ஆனால் அப்படிப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அதனைக்காட்டிலும்  கடினம் எதுவும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் அதை தவிர்க்கவும் செய்வர்.

      ஹோமியோபதியை (CLASSICAL) முறையாகக் கற்கும் வழி என்ன என்று ஓர் உண்மை ஹோமியோபதியரிடம் கேட்டால், முதலில் தத்துவதைப் (ஆர்கன்னன்) படி என்பர். பின்பு மெட்டீரியா மெடிக்கா அதன் பின்பு ரெப்படரி வகைறாக்களை படிக்க அறிவுறுத்துவர்.

      R.O.H -முறையிலும் அதற்கு விதிவிலகல்ல. முதலில் நாம் தத்துவங்களைத்தான் படிக்க வேண்டும்.  ஆங்கிலம் தெரிந்தவர்கள் Dr.M.L. சேகல் அவர்களின்  R.O.H  வரிசை 1,1A, மரRறும் 2 ஐ அவசியம் படிக்க வேண்டும்

      R.O.H என்றதுமே பலரும் நினைப்பது மனக்குறிகளை மட்டும் பயன்படுத்தி மருந்து தேர்வு செயதல் என்பதே. அது மிகவும் தவறான கருத்தாகும்.

      R.O.H -ல் மனக்குறிகளை எடுத்துக் கொள்வதில்லை; மனநிலைகளை எடுத்துக்கொண்டு மருந்தளிக்கப்படுகிறது. என்பதை அடிப்படை விஷயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

      மனக்குறிகளுக்கும் மனநிலைக்கும் என்ன வித்தியாசம்?

              மனக்குறிகள் ஒரு மனிதரிடத்தில் எப்போதும் உள்ளவை. மனநிலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் காணப்படுபவை.

       எடுத்துக்காட்டாக ஒருவர் ‘சிடுமூஞ்சிஎன்று பெயரெடுப்பது அவரது மனக்குறியைக் காட்டுகிறது. “சளி பிடித்தால் சிடுமூஞ்சித்தனம்என்பது மன நிலை. அதாவது அவர் சளி பிடித்திருக்கும்போது மட்டும் ‘சிடுமூஞ்சியாக மறியிருகிறார். அவர் சாதாரணமாக அப்படி இருப்பதில்லை. ஆனால் முதலாமானவர் சுபாவமே ‘சிடுமூஞ்சித்தனம்அது அவரது இயல்பு. மாற்றுவது கடினம்.

      ஒருவரது உடல்நலக் குறிவினால் அவரது இயல்பான மனநிலை மாறிவிடுகிறது. அல்லது வெளிக்காரணங்களால் மனநிலையில் மாறுதல் வரும் போது உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. என்றுகூடச் சொல்லாம். அத்தகைய மனநிலைகளை அடையாளங்கண்டு மருந்தளித்து குணமாக்குவதே  Hit the Right Target”

                அந்நிலைகளே நிலைத்த. நீடித்து, நிலையாதிக்கம் (P.P.P) செyவதாக உள்ள “மனநிலைகள்”. அம்மன நிலையை அவருடைய வார்த்தைகள் செய்கைகள் மூலமாக நாம் அறிந்து அதை ரெபரட்டரி மொழியாக மாற்றம் செய்வதில்தான் நமது திறமை அடங்கியுள்ளது.

                நமது நண்பர் ஒருவர் இயல்பில் கருமியாகவோ அல்லது ஊதாரியாகவோ இருக்கிறார். அவருக்கு உடல்நலக் குறைவுக்கு நாம் மருந்தளிக்க வேண்டும்போது அவர் ‘கருமி அல்லது ‘ஊதாரிஎனபதை மனதில் வைத்துக் கொண்டு மனக்குறிகளுக்கேற்ற மருந்தளிக்க முற்பட்டால் நாம் தோல்வியயைத்தான் தழுவுவோம். அம்முறை  ROH ஆகாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

      கருமியான நம் நண்பர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு  “எப்படியாவது சரி செய்யுங்கள்....நான் குணமாக வேண்டும்....நான் எதைப் பற்றியும் கவலைப் படவிலை(பணத்தைப் பற்றிக்கூட)...... என்று கூறுவதுதான் அப்போதைய அவரது மனநிலை.

      இங்கு  Praying , Mood repulsive, போன்ற குறிமொழிகளை நாம் தேர்வு செய்து மருந்தளிப்பதின் மூலமே அந்நண்பரது உடல் நலமாகும்.

      வெறொரு நண்பர் இயல்பில் ‘ஊதாரியாக’, அதிகம்  செலவு செய்பவராக இருக்காலாம். ஆனாலும் அவரக்கு மருந்தளிக்க வேண்டியிருக்கும்போது “இப்படி எத்தனை நாளைக்குத்தான் மருந்து சாப்பிடுவது,, என்று சொல்வது அவரின் அப்போதைய மன நிலை வெளிப்பாடாக எடுத்துக் கொண்டு Fear. Extravagance of “ என்ற குறிச்சொல்லோடுதான் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
      ஆனால் நோயுறும்போது எப்போதுமே ஒருவருடைய மனக்குறிகளுக்கு எதிராகவே அவரது மனநிலை அமையும் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவரின் பொதுவான சுபாவத்திற்கும் அவரது அவ்வப்போதய மன்நிலைக்கும் உடனடியாகத் தொடர்புப் படுத்தக் கூடாது, அது  ROH  அல்ல என்பதே நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது.

      எனவே ROH  மருத்துவர்களின் வெற்றி அவர்கள், நோயாளிகளின் அப்போதைய மனநிலைகளைப் புரிந்து கொள்வதில்தான் உள்ளது.

      எனவே டாக்டர் ராஜன் சங்கரன், டாக்டர் அமர். டி. நிகாம், டாக்டர். பிரபுல் விவிஜயகர் போண்றவர்களின் முறைகளோடு ROH  முறையை குழப்பிக் கொள்வது ஆபத்தில்தன் முடியும்.

      உண்மையான ஹோமியோபதியராக இருப்போம். தெளிவாக R.O.H ஐ பின்பற்றுவோம்.   



      

1 comment:

  1. R.O.H. எதைக்குறிப்பிடுகிறது?

    ReplyDelete