Sunday, December 28, 2014

எளிது எளிது ஆர். ஓ. ஹச் எளிது

எளிது எளிது ஆர். ஓ. ஹச் எளிது

     ஆர்.ஓ.ஹச்- முறையை எளிமையாக கையாள கீழ்கணட மனக்குறிகளைப் பற்றி நாம் அதிகம் விவாதிக்க வேண்டும்.
    
     ஹோமியோபதி மருத்துவத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் மனக்குறிகள் DELUSION, DELIRIUM, FEAR,  ANXIETY, ANGUSH, ANSWER, ANGER           மற்றும் GESTURES போன்றவையாகும்.

       இதில் மிகவும் அதிக் அளவில் பயன்படுத்தும் DELUSION மற்றும் FEAR அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறிகளாகும்.
      
       DELUSION என்பதனை நாம் எளிமையாக துயரரின் ‘எண்ணம்எனற அடிப்படையில் புரிந்து கொண்டால் வெற்றிகள் எளிது.

       DELUSION, Poor he is
            DELUSION, sick imagination of      
            DELUSION wrong has suffered
            Delusion wealth of
            Delusion seized he is
            Delusion, thin is getting
            Delusion, thin she is

என்பனவற்றில் DELUSION என்ற சொல எண்ணம் எனற பொருளில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். அவைகள் முறையே, தான் ஏதோ ஒன்றில் குறைவுற்று இருப்பதாக, தான் நோய்வய்ப்பட்டு இருப்பதாக, தவறாக அவதிப் படுவதாக, தான் நல்ல நிலையில் இருப்பதாக, தன்னால் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக், தான் மெலிந்து வருவதாக, தான் மெலிந்து இருப்பதாக.......போன்ற எண்ணங்காளால் துயரர் சூழ்ந்தைருப்பதாக நாம் உணரலாம். எனவே Delusion எனபதை மாயை, மனப்பிரமை போன்று பொருள் கொள்ளக் கூடாது. பொதுவாக DELUSION என்பது துயரர் தன் வாயினால் சொல்லுவதாகவே இருக்கும்.

அடுத்தது DELIRIUM
      
       DELIRIUM திடீரென்று ஏற்படும் ஒரு பிறழ்வு நிலை. அது மகிழ்ச்சியானதாகவோ மகிழ்ச்சியற்றதாகவோ இருக்கலாம்.





       DELIRIUM,  crying help for எனபதை அப்படித்தான் எடுத்துக் கொள்ள் வேண்டும். உதவி கேட்டு தன்னை மறந்து கூக்கலிடுகிறார் எனலாம். பரவச நிலை என்றும் DELIRIUM த்திற்கு பொருள் கூறலாம். DELUSION சற்று நிரந்திரமானது. ஆனால் DELIRIUM ரொம்பவும் தற்காலிகம்.

FEAR -  பயம் அபிப்பிராயம், கருது, பக்தி (மரியாதை), சிரத்தை எனப் பொருள் கொள்ளலாம்.

FEAR எதிர்காலம் குறித்து நிகழ்வில் கொள்ளும் அச்சம்.
      
       இங்கு எதிர்காலம் என்பது அடுத்த நிமிடம், ஏன் அடுத்து வினாடியாகக் கூட இருக்கலாம்!

                FEAR, sufferings of என்பதற்கு உதாரணமாக, வாய் முழுவதும் புண் உள்ள துயரர், திறந்தால் வலிக்குமே என்று வாய் திறவாமல் இருப்பதைக் குறிப்பிடலாம். வாயைத் திறந்தால் வலிக்கும் என்பது உடனடி எதிர்காலம்.

                FEAR, betrayed being, ‘தான் ஏமாற்றப்படுவோம் எனற பயம், FEAR, suffocation of  -ல்இரவில் மூச்சுத்தினறல் ஏற்பட்டல் என்ன செய்வதுஎனபது துயரர் மொழியாக இருக்கலாம். அதிகம்பேர் இருக்கும் இடத்திற்கு செல்ல பயம் எனபதும் FEAR, suffocation of  ல் வரும்.


ANXIETY-
       இது மனக் கவலை. ANXIETY, pain about, என்பதில் ‘வலி எதனாலோஎனற கவலை. ANXIETY, others about,  மற்றவர்கள் குறித்த கவலை.


ANGUSH

       இது வருத்தம் வேதனை ---இது உணரப்படுவது.

இதற்கு உதாரணமாக ANGUSH,  stool before, ANGUSH, stormy weather in போன்றவற்றை கூறலாம்.

       மேற்கணடவைகளை நாம் ஆர்.ஓ.ஹ்ச்-சின் பால பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

       வரும் இதழ்களில் ANGER,  ANSWERS, GESTURES, SMILING, LAUGHING முதலியவைகளை விரிவாகப் பார்க்கலாம்.

##################


1 comment:

  1. The Best Casinos in USA - APRCasino
    It is one of the most well-known casino casinos, and www.jtmhub.com it is owned communitykhabar and operated 바카라 사이트 by the Rincon aprcasino Band of Luiseno Indians. 토토사이트 There are over 100 different

    ReplyDelete