யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?
யார் உண்மையான ஹோமியோபதி மருத்துவர்?
ஹோமியோபதி மருத்துவக்கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களா?
பட்டம் பெறாமல் ஹோமியோபதி மருந்துகளை அனுபவத்தில் தெரிந்து கொண்டு அம்மருந்துகளை
துயரருக்கு அளிப்பவர்களா?
ஒருவர் BHMS, DHMS அல்லது M.D
(Homeo) என்ற பட்டங்களை பெற்றதினாலோ RHMP போன்ற அரசுப் பதிவு
பெற்று விட்டதாலோ அவர் ஹோமியோபதி மருத்துவராகி விட முடியுமா?
ஆசிரியர்
பட்டயம் பெற்றவர்கள் ஆசிசியராகப் பணியாற்ற தகுதி பெற்றவராகப் கருதப்படுகிறது.
ஆணால் அத்தகுதி பெற்றவர்களில் மிகச் சிலராலேயே சிறந்த ஆசிரியராக ( கவனிக்கவும் ‘நல்லாசிரியர்’
களாக அல்ல) பரிணமிக்கமுடிகிறது.
அவ்விதமாக தற்போது உலகெங்கிலும் உள்ள
ஹோகியோபதி மருத்துவர்களில் ( அல்லது அப்படி சொல்லிக் கொள்பவர்களில்)
மிகக் குறைந்த விழுக்காட்டினரே உண்மையான
ஹோமியோபதியராக உள்ளனர்.
எனது நண்பர் ஒருவர், தனது குழந்தையின் டான்ஸில்
பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வருவதாச் சொன்ன்னர் “........”என்ற
ஒரு கம்பனி கூட்டு மருந்து பெயரைச் சொல்லி “அதுதானே சார் டான்ஸிலுக்கு ஹோமியோபதி
மருந்து? என்று கேட்டார். அம்மாதிரி பல
கூட்டு மருந்துகளின் பெயர்களையும் அவர் சொன்னார். அதன் மூலம் தனக்கும் ஹோமியோபதி
தெரிகிறது என்ற பெருமை அவர் வார்த்தைகளில் கொப்பளித்தது.
மற்றொரு நபர் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த
ஹோமியோபதி மருத்துவக்குறிப்பைப் பார்த்து அவருடைய மூலநோய்க்கு மருந்து
சாப்பிட்டதாகவும், ஆனால் குணம் ஏதும் தெரியவில்லை என்றும் அதனால் ஹோமியோபதி
மருந்துகள் சரியாக வேலை செயாது என்றும் தனது
கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஒரு வயதான மருத்துவர் (RHMP மற்றும் RAMP ஆகிய இரு பதிவுகளை
வைத்திருப்பவர்) ஹோமியோபதியுடன் ஆயுர்வேதா, சித்தா மருந்துகளியும் சேர்த்துக்
கொடுப்பதால் மட்டுமே ஓரளவு பலன் கிடைக்கிறது என்றும், அத்துடன் அல்லோபதியையும்
சேர்த்துக் கொடுப்பதினால் சிறந்த பலன் கிடைக்கிறது” என்றும் தனது அனுபவங்களை
என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
மற்றொரு மருத்துவர்,
“ஹோமியோபதி மருந்துகளி தினமும் 6 வேளை உட்கொள்ளவேண்டும் என்றும் அதுவும் உயர்
வீர்யங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் எனக்கு அறிவுரை கூறினார்.
”நான் எப்போது பயன்படுத்துவது ..........கூந்தல்
தைலம்தான்....அது ஹோமியோபதி மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டதுதானே? என்று
வினவும் அப்பாவிகளும் உண்டு.
“சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கும் அல்லோபதி மருந்துகளுக்கு
இடைப்பட்ட வடிவ வேற்றுமை பல ஆண்டுகளுக்கு
முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. அம்மருந்துகள் யாவும், அல்லோபதி மருந்துகள் போலவே
மாத்திரைகள், கேப்சூள்கள், டாணிக்குகள், சிரப்புகள், லோஷன்கள் ,ஆயின்மெண்ட்டுகல்
மற்றும் மூச்சிசிழுப்பான்கள் ( inhalers) வடிவங்களில் கிடைக்கின்றன. தற்போது எந்த ஒரு
சித்த மருத்துவரும் தனது சிந்தூரஙகள், பற்பங்கள் மற்றும் சூரணங்களை சிறிய
மெழுகுத்தாட்களில் மடித்துத் தருவதில்லை! எல்லாம் கேப்சூல் வடிவமாகவும் மாத்திரைகள்
வடிவிலும் கவர்ச்சிகரமான பாட்டில்களில் அடைத்து விற்பனை செயாப்படுகின்றன.
ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டும் தற்போதுகூட சிறிய
கடுகு வடிவ மாத்தைரைகளைப் பயன்படுத்திவருவது அவர்களுக்குள் ஏதோ ஒரு தாழ்வுமன்ப்பான்மையை
ஏற்படுத்தி விடுவதாகக் கொள்ளலாம். அதற்காகக் கூட வர்கள் கடுகு வடி மருந்துகள் கூடவே
கூட்டு மருந்துகளையும் பயோ கெமிக்கல்
(உயிர்வேதி) மருந்துகளையும் பயன்படுத்தை வருவதாகத் தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட
எந்த முறையும் உண்மை ஹோமியோபதி ஆகாது.
பின்பு எதுதான் உண்மையான ஹோமியோபதி மருத்துவம்?
இதற்கான
விடைதன் விவாதத்திற்கு உரியதாகிவிடுகிறது.
THE SCOPE OF HOMOEOPATHY
BEGINSWHERE THE SCOPE OF OTHER SCIENCES ENDS
_ Dr. Prafull Vijayakar
மாமேதை ஹானிமன் ஆர்கனான்
மணிமொழி 1
ல் “ நம்மிடம் சிகிச்சை பெற வருகிறவர்களின் நோய்களை வேறுடன் களைந்து,
மீண்டும் வராதபடி நோயற வாழ செய்வது ஒண்றே வைத்தியரின் உயர்ந்த கடமையாகும்..”
என்கிறார்.
மணிமோழி 2
ல் “ நோயற்ற நிலை விரைவில் ஏற்பட
வேண்டும், நோயாளிக்கு எவ்வகையான துன்பமும் நேரக் கூடாது. நோய் மீண்டும் திரும்பி
வராமல் வேருடன் வீழ்த்திட வேண்டும். முற்றிலும் நம்பத் தகுந்த எள் அளவுத் தீங்கையும் உண்டாக்காத, எளிதிலே
புரிந்து கொள்ளக் கூடிய வழி முறைகளுக்கு
உட்பட்டதாக இருக்க வேண்டும்...”
என்கிறார்.
உண்மையான ஹோமியோபதியர்கள் யாரும், ஹோமியோபதி
கூட்டு மருந்துகளையோ, ஹோமியோபதி ஆயிண்ட்மெண்ட்களையோ (!) , அவசரத்திற்கு அலோபதி
மருந்துகளையோ, பயோ கூட்டு மருந்துகளையோ, சித்த, ஆயுர்வேத மருந்துகளையோ தாம்
கொடுக்கும் ஹோமியோபதி மருந்துகளுடன் பரிந்துரை செய மாட்டர். அவர்களுக்கு ஹானிமானின் மேற்சொன்ன இரண்டு
மணிமொழிகளும் வேதம். அதனை மீறி அவர்களால் எண்ணவும் முடியாது. அவர்கள், “ ஒரே மருந்து, குறைந்த அளவு
மருந்து என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அதன் மூலமே மிகச் சரியான குணமாக்களை
நிகழ்த்திவிடுவர்.
சில உதாரணங்கள்:
எனது ஹோமியோபதி மருத்துவ நண்பரின் உறவினர்
தலைப் பிரசவத்திற்காக ஒரு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ நாளாகியும் குழந்தை
திரும்பவில்லை, கொடி சுற்றியுள்ளது என மருத்துவர்கள் சிசேரியனுக்கு ஏற்பாடு
செய்கிறார்கள். அப்பெண்ணின் தாயாரிடம், நமது நண்பர், இதுபோன்ற நிலைகளில்
பெண்ணுக்குக் கொடுக்கச் சொல்லி பல்சடிலா - 200 ல்
இரண்டு பொட்டலங்களை கைவசம் கொடுத்தனுபியிருந்தார். ஆனாலும் அந்த
அம்மாவிற்கு பெண்னை அம் மருத்துவ மனையின் மேல் தளத்த்தில் உள்ள ஆபரேஷன்
தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வரை ஹோமியோபதி நினைப்பு வரவில்லை. அவர் தன்ன்னிடம் இருந்த மருந்தின் நினைப்பு
இல்லாமல் நண்பருக்கு போன் செய்து நிலைமையை விவரித்துள்ளார். நண்பர் தான்
கொடுத்தனுப்பிய மருந்துகளை கொடுத்தீர்களா என வினவ, அப்போதுதான் அந்த அம்மவிற்கு
தன்ன்னிடம் உள்ள ஹோமியொபதி மருந்து நினைவிற்க்கு வந்துள்ளது. உடணே எப்படியாவது
அதனை பிரசவ அறையில் உள்ளே இருக்கும் தனது மகளிடம் கொடுத்துவிடுவதாக செல்லி,
டாக்டரிடம், தனது குலதெய்வ சாமியின் திருநீறு நெற்றியில் தரிப்பதற்கு, ஆபரேஷன்
தியேட்டர் உள்ளே செல்ல அனுமதி பெற்றுள்ளார்.
அதற்குள், மயக்க மருந்து நிபுனர் பெண்ணிற்கு
மயக்க மருந்து செலுத்தி, அவர் மயக்கமடைந்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுனர்
கீழ்தளத்திலிருந்து சிசேரியன் செய்வதற்கு கிளம்பிவிட்டார். இவ்விடைப்பட்ட
நேரத்தில் பல்சடில்லா 200 அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை நிபுனர் ஆபரேஷன் அறைக்குள்
நுழைகிறார். அப்போதுதான் அவ்வதிசயம் நிகழ்கிறது.
குழந்தை சரியான நிலையில் வெளியே வருகிறது. சுகப்பிரசவம் !!!
அங்கிருந்த மருத்துவர்கள் ஆச்சரியம்
அடைகின்றனர்.
“இவ்வாறு நிகழ சாத்தியமே இல்லையே..!!!என்று
ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்கின்றனர்.
சில நிமிடங்களில் ஹோமியோபதி அதன் ஆற்றலை
வெளிப்படுத்தியுள்ளது. ஹோமியோபதி த்விர வேறு எந்த மருத்துவத்திலும் நிகழாத
அற்புதம் இது.
மற்றொரு உதாரணமாக அதே நண்பர், வேறு ஒரு
பெண்ணிற்கு பிரசவ நாள் கடந்தும், ”வலியே இல்லை...” என்று கூறியவருக்கு ஓப்பியம்
30 ஒரே வேளை தந்து சுகப்பிரசவம் ஆன அனுபத்தையும் எம்முடன் பகிர்ந்து
கொண்டுள்ளார்.
எனவே சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
ஹோமியோபதி மருந்து அதன் குணமாக்கலை நிகழ்தாமல் விடுவதில்லை.
உண்மையான ஹோமியொபதியர் ஒற்றை மருந்தைத் தவிர
வேரேதும் கொடுப்பதிலை.
உண்மை ஹோமியோபதியை நம்புவோம்....வெற்றி
நமதே!!!!
.
##################