Thursday, January 1, 2015

என்றென்றும் ஹோமியோபதி

என்றென்றும் ஹோமியோபதி


            ஹோமியோபதியில் கோடைக்கால நோய்களுக்கான மருந்துகள் குறித்து ஒரு கட்டுரை எழுத நண்பர்  பணித்தார்.

            கோடைக்கால  மருந்துகள் என்றால்....?

            கோடைக்காலத்தில் மட்டுமே அல்லது கோடைக்காலத்தில் அதிகமாக பயன்படும் மருந்துகள் என்ன என்று யோசிக்கும்போது,  ஒரு மருந்து கூட எனக்கு நினைவுக்கு வரவில்லை. நானும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமியோபதி மருந்துகளுடன், மருத்துவத்துடன் தொடர்பில் இருக்கிறேன். என் கண் முன் ஒரு ஹோமியோபதி மருந்தும் ‘கோடைக் கால’ மருந்தாக தென்படவில்லை!!!

            கோடைக்காலத்தில் மட்டுமே ஒரு சில நோய்கள் தோன்றுவதாகக் கூறுவர். அவை, சின்னமை (Chicken Pox) கண் அகழ்ச்சி(Madras Eye) வேனல் கட்டிகள், சூரிய தாக்குதல் போன்றவை. கோடைக்காலத்தில்தான் சிலவகை தொற்று நோய்களும் வேகமாகப் பரவக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லுவர்.

            ஆனால் அவைகளுக்குக் கொடுப்பதெற்கென ஹோமியோபதி முறையில் என்ன என்ன மருந்துகள் கொடுக்கலாம் என்பதைப் பட்டியலிட முடியுமா??

            அப்படிப் பட்டியலிடப்பட்டவை ஹோமியோபதி மருந்துகள் ஆகுமா? அப்படிப் பரிந்துரைப்பவர் ஹோமியோபதி மருத்துவர் ஆவாரா???

            ஒருவர் ஹோமியோபதி மருந்துகளைக் கையாளுவதால் மாடுமே அவர் ஹோமியோபதி மருத்துவர் ஆகிவிடுவாரா???

            அலோபதி(M.B.B.S) படித்து அலோபதி மருந்துகளைக் கையாளுவதால் ஒருவர் அலோபதி மருத்துவர் ஆகிறார்.                 (அதாவது “டாக்டர்!”). சித்தாவோ (B.S.M./S) ஆயுர்வேதமோ (B.A.M.S) படித்து அம்மருந்துகளைக் பரிந்துரைக்கும் திறன் பெற்றவர்கள் முறையே சித்த மருத்துவர் எனவோ, ஆயுர்வேத மருத்துவர் எனவோ அழைக்கப்படுவர். இதுபோல மற்ற மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும். இதில் எந்த கருத்து வேறுபாடுகளுக்கும் வாய்ப்பிலை.

            ஆனால் ஒருவர் ஹோமியொபதியில் பட்டமோ பட்டயமோ பெற்று, அவரிடம் நோயென்று வருபவர்களுக்கு ஹொமியோபதி மெட்டீரியா மெடிக்காவில குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளைக் கொடுப்பதினால் அவர் ஹோமியோபதி மருத்துவர் ஆகிவிடுவார?

            இதற்கு சரியாக பதில் தெரிந்தால்தாம் நாம் ஹோமியோபதியில் உள்ள கோடைக்கால மருந்துகள் குறித்து குறித்தோ பேசவோ அல்லது பேசாமல் இருக்கவோ முடியும்!

            ஹொமியோபதி மருத்துவத்தில் நோய்கள் உண்டா?  நோய்க்கென்று மருந்துகள் உண்டா?

            ”உனது நோயின் பெயர் எனக்கு வேண்டாம். எனது மருந்தின் பெயர் உனக்குத் தெரிய வேண்டாம்” என்பது ஹோமியொபதியை நம்க்கு அருளிய ஹானிமன் வாக்கு. ஆனால் அவரே “உலகில் தோன்றும் எந்த ஒரு நோய்க்கும் ஹோமியோபதியில் தீர்வு உண்டு” என்கிறார்..

             அதாவது நமது மருத்துவத்தில் நோயே (நோய்க்குப் பெயரே) கிடையாது!. அனால் துயரருக்கென்று மருந்துகள் உண்டு.

            இவர் பிரையோனியா....இவர் ஸ்டானம்....இவர் சல்பர்...போன்று.

            இப்படி நோயே இல்லாதபோது கோடைக்கால மருந்துகால மருந்தௌகள் என்று எங்கே இருக்கும்?
           
            ஹோமியோபதியின் தனித்துவமே இதுதானே?  இதனால்தானே மற்ற எந்த மருத்துவ முற்யோடும் ஒப்பிட முடியாத உன்நதமாக ஹோமியோபதி இருக்கிறது. அலோபதி மருத்துவத்தில் நோயின் பெயர் தெரியாமல் அதனைக் குண்மாக்க(!) முடியாது. அக்கண்னோட்டத்துடன் நாம் ஹோமியோபதியை அனுகுவதின் அவலம்தான் “ஹோமியோபதியில் சுகருக்கு மருந்திருக்கா..? என்பது போன்ற வினாக்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

            அலோபதியில் வழங்கபபடும் Paracitamol 250mg Paracitamol 500mg, Paracitamol650 mg ஐ அகோனைட் 6, அகோனைட் 30, அகோனைட் 200  உடன் ஒப்பிட முடியுமா? அவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஹோமியோபதி அறியாத ஒருவருக்கு புரிய வைக்க முடியுமா?

            அவ்விதம் எந்த ஒரு வகையிலும் ஹோமியோபதியை மற்ற மருத்துவ முறைகளுடன் ஒப்பிட முடியாது. அப்படியிருக்க ஹோமியோபதியில் சில குறிப்பிட்ட நோய்களுக்கென்று மருந்துகளை பட்டியலிட்டு கட்டுரை எழுதுவதும், புத்தகங்கள் வெளியிடுவதும் எத்தகைய அபத்தம்!.

            ஹோமியோபதியின் தனித்துவமே,  துயரரைத் தனிமைப் படுத்துவதில்தான் இருக்கிறது. அவருக்கென்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்தை, குறைந்த அளவு, ஒருவேளை மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பதே இங்கு தாரக மந்திரம்.

            ஹானிமன் அறிவுறுத்திய தொல்சீர் முறையாகட்டடும், மனக்குறிகள், பொதுக்குறிகள், மாறுபாட்டுக் குறிகள் என்ற வரிசையில் மருந்து தேர்ந்தெடுக்கும் மரு. கெண்ட் முறையாகட்டும். மனதிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் மரு.சேகல் முறையாகட்டும், துயரர்களின் உணர்வுகளை ஆராயும் மரு இராஜன் சங்கரன் முறையாகட்டும், மருந்துகளின், குறிப்பாக தனிமங்களின் தன்மையை வகைப்படுத்தி மருந்து தேர்ந்தெடுக்கும் ஜான் ஸ்கால்டன் முறையாகட்டும் எதிலுமே மருந்துகள்  கொடுக்கப்படுவதில், SINGLE REMEDY,  MINIMUM DOSE என்பதில் உண்மை ஹோமியோபதியர்கள்  மாறுபடுவதில்லை.

            சமீபத்திய ஆரய்ச்சிகளின்படி அலோபதியில் பயன்படுத்தப்படும் “ஆண்டிபயாடிக் மருந்துகள் அதன்பயன்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.  அத்தகைய ஆராய்ச்சிகள், “பல நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்றுவிட்ட நிலையில் சிறிய காயங்கள். சாராரண தொற்றுகள், இவற்றிலிருந்துகூட நாம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாத, அவர்கள் அதற்கு பலியாகும் பரிதாப நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்க்கும்  ஆண்டிபாயாடிக் மருந்துகல் பயனற்றவையாகி விட்டன..” என்பது அலோபதி டாக்டர்களின் சமீபத்திய கவலை.

          அதாவது, அம்மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலை பாக்டீரியாக்கள் பெற்றுவிட்டன. சுருக்கமாக சொன்னால் ஆண்டிப்யாடிக்குகள் கண்டுபிக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைக்கு ஆங்கில மருத்துவம் சென்றுவிட்டது!! என்பதே உண்மை.”

          ஆனால் ஹோமியோபதி மருந்துகள் அப்படிப்பட்டவையா....? ஹானிமனால் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட ‘பெல்லடோனா’வைத்தான் நாமும் இப்போதும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஹோயோபதியில் பயன்படுத்தும் ஒரு அகோனைட்-டின் செயல்பாடோ, சல்பரின் செயல்பாடோ, முன்பிருந்ததை விட குறைந்து போய்விடாதாக யாரும் சொல்லிவிட முடியாது.  சித்த அல்லது ஆயுர்வேத மருத்தௌவத்தில் கூட மருந்து தாயரிக்கப்படும் மூலப் பொருட்கள் தரம் குறைந்ததினால் அம்மருந்துகள் வீரியம் இழப்பதாக கூற முடியும்.

            ஆனால் ஹோமியோபதியில் அப்படியா....? ஏனென்றால் நாம் கொடுப்பது மருந்தல்ல,  மருந்தாற்றல்.

            ஆம், மருந்துகள் கொடுத்து குணப்படுத்தும் எந்த ஒரு மருத்துவ முறையுடனும் ஹோமியோபதியை ஒப்பிட முடியாது. அவர்கள் கொடுப்பவை மருந்துகளின் பருப் பொருள்.  நாம் கொடுப்பது மருந்தாற்றல். ஆடாதொடை சளித்துயருக்கு மருந்தாக சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படும். ஆனால் ஜெஸ்டீசியா ஆடாதொடா 30C  ஹோமியோபதி மருந்தில் மருந்தின் பருப்பொருள் எத்தனை சதவீதம் ..?   விடை 0%.. ஹோமியோபதியின் பால பாடம் படித்தவர்களுக்குகூட அதன் காரணம் தெரியும். ஜெஸ்டீசியா ஆடாதொடா   சளித்துயருக்கு மட்டுமா ஹோமியோபதியில் மருந்தாகப் பயன்படுகிறது. அல்லது நம்மிடம் வரும் சளித்துதுயரர் அனைவருக்கும் அது ஒன்றே மருந்தாகிவிடுமா?

            ”சுகருக்கு ஹோமியோபதியில் மருந்திருக்கா..? என்கிற ஒரு கட்டுரை நமது ‘இயக்கயியல்”  இதழில் வெளிவந்தது. சுகருக்கு என்ன சாதாரண காய்ச்சலுக்குகூட நமது ஹோமியோபதியில் மருந்தில்லை.!!!

            ஆம்.... காய்சலால் அவதிப்படும் துயரருக்கே நாம் மருந்தளிக்கிறோம். அது சாதாரணக் காய்சாலாக இருந்தாலும் சரி. உலகையே ஆட்டிப் படைக்கும் பன்றிக் காய்ச்சலாக ((Swine flue) இருந்தாலும் சரி


        பெயரே தெரியாமல் பரவும் மர்மக் காய்ச்சலாகட்டும், தெரிந்தேக் கொல்லும் புற்றாகட்டும் அதனால் துயரப்படுவோரைக் காப்பாற்ற வல்லது ஹோமியோபதி. ஹோமியோபதியில் நோயின் பெயருக்கோ. நோய் நிலைகளுக்கோ மருந்தில்லை, -அது கோடைக் காலத்தில் வருவதாக இருந்தாலும், குளிர் தாக்குவதால் வருவதாக் இருந்தாலும்!! எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் துன்புருவோருக்கு நிவாரணமளிப்பது ஹோமியோபதிதான். வின்வெளிக்குச் செல்பவர்களுக்கு அங்கு அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனதளவிலான துயரங்களுக்கு ஹோமியோபதியே நிவாரணமளிக்கிறது என்ற செய்தி ந்ம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். ஏன் அங்கு “பெரியண்ணன்” அலோபதி பயன்படுவதில்லை??  அலோபதி மருந்துகள் வளிமண்டலத்திற்கு வெளியே பயனற்றுப் போகின்றன.

            இதைத்தான் மாமேதை ஹானிமன் அவர்கலள் “உலகில் தோன்றும் எந்த் ஒரு நோய்க்கும் ஹோமியோபதில் தீர்வு உண்டு” என்கிறார். ஹோமியோபதிக்கென்று தனியான நோயறியும் முறையும்( தனிப்பட்டவருக்கான மருந்து நிர்ணயம் செய்யும் முறை) அதற்கான் காரணிகள் பற்றிய் மாறாத கொள்கையும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) ஹோமியோபதி பாடத்திட்டத்தில் கலக்கப்பட்டதின் விளைவாக, இன்றைக்கு பட்டம் பெற்ற ஹோமியோ மருத்துவர்கள் பலர் ஹோமியோபதிக்கு துளியும் சம்பந்தமில்லாத, லேப் ரிப்போட்டுகளையும். பரிசோதனை அறிக்கைகளையும் நம்பி, பல நோய்களுக்கு ஹோமியோபதியில் தீர்வில்லை என்று கூறிவிடுகிறர்கள். இதற்குத்தான் நமது அரசாங்கமும் வழிகாட்டுகிறது. பொதுவாகவே மாற்று மருத்துவத்திற்கான பாட திட்டத்தை சுயமாக தயாரிக்காமல், ஆங்கில மருத்துவ கலப்போடு அரசு கொண்டு செல்கிறது எனபதை நாம் புரிந்து கொள்ள் வேண்டும் (இது மருத்துவத்தில் உள்ள அரசியல்!)

            எனவே உலகில் இதுவரை தோன்றியிருக்கும் நோய்களுக்கும் .இப்போது வந்து கொண்டிருக்கும் “மர்மக் காய்ச்சல்”களூகும் இனி தோன்றக்கூடிய எந்த வகை ”பூதங்களுக்கும்” ஹோமியோபதியில் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையுடன் உண்மை ஹோமியோபதியர்களாக செயல்படுவோம்.

எங்கும் ஹோமியோபதி.....என்றென்றும் ஹோமியோபதி..


%%%%%%%%%%%%%%

1 comment: