பல்வலி –
அனுபவம் பலவிதம்
ஹோமியோபதியில் தனித் துயருக்கான
மருந்து கொடுப்பது ஏற்புடையதல்ல.
என்றாலும் சிலசமயங்களில் குறிப்பிட்ட நோய்க்கென்று மருந்து கொடுப்பதில் ( ஒற்றை
மருந்து மட்டும்) தவறேதும் இல்லை என்றே மாமேதை ஹானிமன் தொடங்கி, நமது
நாட்டின் ஹோமியோபதி மருத்துவ கலஞ்சியமாகத் திகழ்ந்த திரு. எஸ்.எம். குணவந்தே
வரை கூறியுள்ளனர். அவரின் Introduction
to Homoeopathic prescribing என்ற புத்தகத்தில் near specific
– என்றே பல மருந்துகளைப் பட்டியலிடுகிறார்.
குறிப்பாக நாம் அன்றாடம்
சந்திக்கும் ’பல்வலி’ துயரர்களுக்கு, நான் பயன்படுத்தும் சில specific – மருந்துகளையும், முன்பு Classical Homoeopathy
யில் பல்வலிக்கு மருந்துகள் கொடுத்த அனுபத்தையும், தற்போது மனக்குறிகளை மட்டும்
பயன்படுத்தி பல்வலியைக் குணப்படுத்திய அனுபத்தையும் உங்களிடம் பகிர்ந்து
கொள்கிறேன்.
பல்வலி, பூச்சிப் பல் என்று வருபவர்களுக்கு வேறு
குறிகள் ஏதும் அகப்படாவிட்டால் பிளண்டங்கோ –
6 ல் ஒரு வேளையும், தொடர்மருந்து சில
வேளைகளும் கொடுத்தனுப்புவேன். பெரும்பான்மையாக சரியாகிவிடும்.
இப்படி
பல்வலியுடன் வரும் ஒரு சில துயரர்
அனுபவங்கள்:
ஒருமுறை சுமார் 40 வயது மதிக்கத்தக்க
ஒரு பெண்மனி பல்வலி என்று வந்தமர்ந்தார்.
பல் சொத்தயாகி வலிப்பதாகக் கூறினார்.
பெண்கள் பல்வலி என்றுவந்தால் நான் கேட்கும் கேள்வி: ”வெள்ளைப்படுகிறதா...............? “
என்பதாகும். இதைக் கேட்டதும் சற்றே அதிர்ச்சியுற்றவராக. .”ஏன் கேட்கறீங்க.....? எனக்கு பல்வலிக்கு
மருந்து கொடுத்தா போதும்..” என்றார்.
”அந்தத்
தொந்திரவு இருக்கிறதா என்று சொல்லுங்கள்..?” என்று மீண்டும் கேட்டேன்.
“அதுவும்
இருக்கிறது... அதுக்கு வேறு ஒரு லேடி டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்கிறேன்.....
எனக்கு பல்வலி.......? என்று இழுத்தார். நான்
அப்போது கிளாசிக்கல் ஹோமியோபதி செய்து கொண்டிருந்ததால் இதுபோன்ற கேள்விகள்
கேட்பதுண்டு !
“
சரி... அது படும் இடங்களில் அரிக்கிறதா....? என்றேன். இதனால் மேலும் திகைப்படைந்த
அவர், “ ஆமாம்.... அதுக்கென்ன இப்ப..?
என்று சற்றே எரிச்சலுடன் பதிலுரைத்தார்.
நான்
கிரியோசாட்டம் 30 ல் ஒரு வேளையும் PL ஒருவாரத்திற்கும் கொடுத்து, ஹோமியோபதியின் ஒருசில
அடிப்படைகளையும் எடுத்துக் கூறி அவரை அனுப்பிவைத்தேன்.
சில
நாட்களில் என்னை சந்தித்த அவர், புன்சிரிப்புடன், தனது பல் வலியுடன் பலவருடங்களாக
அவதிப்பட்ட வெள்ளைப்படுதலில் இருந்தும் விடுதலை அடைந்ததாகத் தெரிவித்தார்.
இப்படி
சில அனுபவங்கள் என்றால், நான் ஹோமியோபதி தெரிந்து கொண்ட ஆரம்ப காலத்தில் பல்
வலிக்கு எனக்குத் தெரிந்த ஒரே மருந்து காஃபியா குரூடா தான் ! பல்வலி என்று சொன்னால், வாயில் குளிந்த நீரை
வைத்துக் கொள்ளச் சொல்வேன், வலி குறைந்தால் காஃபியா –வைக்
கொடுத்துவிடுவேன். பலமுறை பயன் தந்திருக்கிறது.
பல்லின்
மேற்பகுதி நன்றாக இருந்து, அதன் அடிப்பகுதியில் ஏற்படும் சொத்தைக்கு “மெஸாரியம்” நன்கு வேளை செய்வதாக
பாண்டிச்சேரி மரு. மர்சியால் எழுதுகிறார். இதுவும் பலமுறை நமது அனுபவத்தில் பலன்
தந்திருக்கிறது. அம்மாதிரியான நிலைகளில் பல்வலி நிற்பதோடு பல் முழுமையும் சீர்
செய்து விடுவத்துதான் அம்மருந்தின் ஆச்சரியம்!
பல்வலியுடன்
அந்த இடம் அழற்சியுற்று இருக்குமானால் ‘மெர்கூரியஸ்” சிறந்த பலன் தருகிறது.
அதேநிலமையில் வலியின் தன்மையை வைத்து “அபிஸ் மெலிஃபிகா” வ்ம் நல்ல
பலனலிக்கிறது.
இது இப்படியிருக்க, மனக்குறிகளை மட்டும்
வைத்து மருந்தளிக்கும் முறையில், நாம் இது போன்ற துயரர் வார்த்தைகளைக் கேட்கலாம்:
”இரண்டு நாட்களாக பல் வலிச்சுகிட்டே
இருக்குங்க.......உடனே நிக்கற மாதிரி மருந்து கொடுங்க.....”( 1.DELUSION, Injury, Injury is
being, 2. CARRIED desire to be fast) RhusTax மருந்தாக வருகிறது.
”பல்வலி வந்துடுச்சுனா.. அதே
சிந்தனையாவே இருக்கு... வேறு ஒன்றும் செய்ய முடியல.......” “ ரொம்பத் தொந்திரவாக
இருக்கு....”(2.DELUSION,
Possesses of being, 2. DISTRUBED averse
being) Belladonna மருந்தாக வருகிறது.
வாயைத் திறந்தால் பல் வலிக்கும் என்பதால் வாயைத் திர்றக்காமல்,
வலியினால்...ஸ்...ஸ் என்று அரற்றும் துயரருக்கு , FEAR of suffering of மற்றும் SENSITIVE, Painful, sensitiveness, to
என எடுத்தால் Spigelia மற்றும் Coffia Cruda வும் மருந்தாக வரும். மற்றக் குறிகளை
கவனித்து உரிய மருந்து கொடுக்கலாம்.
”வலி தாங்க முடியவில்லை..சார்...”
என்றும் , “ சாப்பிடும் போது வலி அதிகமாகிறது...அதனால் சாப்பிட பயபடும்
துயரருக்கு, 1.IMPATIENTS, Pain from 2. FEAR of suffering of என குறிகளைக்
கணக்கிலெடுத்து, CHAMOMILLA
வை
மருந்தாக கொடுக்கலாம்.
எப்படி இருப்பினும் பல்வலி என்று
வரும் துயரர்களுக்கு எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக குணம் தெரிந்தால்
நமது புகழ் உச்சமடையும்.
@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment