Saturday, May 11, 2019

அதிகம் பயன்பாட்டில் இல்லாத குறிமொழிகள்


அதிகம் பயன்பாட்டில் இல்லாத குறிமொழிகள்
ஞான மருத்துவம் ஜனவரி 2019 இதழில் வெளியான கட்டுரை
-- ஏ.ஆர். வீரராகவன்.


     ROH முறையில் நாம் ஹோமியோபதி மருத்துவத்தை செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சில குறிமொழிகளே அடிக்கடி தேர்ந்தெடுக்கப்படுவதாக சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அப்படி அடிக்கடி பயன்படும் குறிமொழிகளை வைத்து மருந்து தேர்ந்தெடுக்கும்போது அது சமயங்களில் தோல்வியில் முடிவதுண்டு. அப்போது நாம் மருந்துகாண் ஏட்டில் அக்குறிப்பிட்ட துயரருக்கு, அப்போதய மனநிலைக்கு ஏற்ப பொருந்தக்கூடிய, அதிகம் பயன்பாட்டில் இல்லாத, குறிமொழிகளை நாம் கண்டறிந்து மருந்து கொடுத்தால் அது வெற்றியைத் தருகிறது.

          அவ்விதமாக, சில புதிய குறிமொழிகளைப் பயன்படுத்தி வெற்றியடைந்த ஒரு துயரர் வரலாறு :

          சுமார் மூன்று வருடங்ளுக்கு முன் ஒரு பெண் துயரர். வயது 43.
          அவருக்கு விடாத இருமல். ஆறு வருடங்களாக இருமலால் அவதிப் படுகிறார். இருமல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சில சமயங்களில் இருமும்போது சிறுநீர் கழிந்துவிடுகிறது.

          அவருக்கு வேறு சில தொந்திரவுகளும் இருந்தன. அவருக்கு இனிப்பு ஒவ்வாமை (Sweet Allergy) இருந்தது. அதாவது அவர் எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிடுகிறாரோ உடனடியாக சளி பிடித்து தலைவலி வந்துவிடும். மேலும் அவருக்கு முதுகில் சிறிய அளவில் கீலாய்டும் (Keloid) இருந்தது.

          நான் அவருடைய தொந்திரவுகளுக்கு ஏற்பவும், அவ்வப்போதய மனநிலைக்கேற்பவும் பிரையோனியா, நக்ஸ் வாமிகா, பெல்லடோனா போன்ற மருந்துகளைக் கொடுத்து வந்தேன். இதன் மூலம் அவருடைய தொந்தரவுகள் குறைந்தனவே ஒழிய முற்றிலுமாக நீங்கியபாடில்லை.

          அத்துயரரின் உறவினர் ஒருவர் அல்லோபதி மருத்துவர். அம்மருத்துவரிடமும் துயரர் மருத்துவம் பார்த்துக் கொள்கிறார். என்றாலும் குறிப்பிட்ட முன்னேற்றம் எதுவும் இல்லை.

          அவர் எனது மருத்துவத்திற்கு வரும்போதெல்லாம் இருமிக் கொண்டுதான் இருப்பார். பலமுறை அவருக்கு மருந்துகளை மாற்றி மாற்றி கொடுத்து பின் ஒருநாள் அவரது ஒரு குறிப்பிட்ட செயல்பாடு  என் மனதில் வித்தியாசமாகப் பட்டது.

          அதாவது, அவர் தனது துயரங்களை விவரிக்கும் போது சில சமயங்களில் அது Objective reasanable என்ற குறிமொழியை உணர்த்துவதாக இருக்கும். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவரது வார்த்தைகள் Superstitious என்ற குறிமொழியை குறிப்பதாக அமைந்திருக்கும்.  அவருடைய பேச்சு எப்போது ஒரு குழப்பமானதாகவே இருக்கும்.

இதற்கேற்ற குறிமொழியைத் தேடும் போது, எனக்கு கிடைத்தவை :

1.  Mind, Irrational, alternating with rationality,
2.  Mind, Confusion of mind, dream, as if in
3.  Mind, Speech incoherent.
என்ற குறிமொழிகளின் அடிப்படையில் அவருக்கு Cann. Ind. 30 ல் ஒரு வேளை மருந்தும், தொடர் மருந்துகள் 15 நாட்களுக்கும் அளிக்கப்பட்டது.

ஆச்சரியப் படத்தக்க வகையில் அவருடைய இருமல் மருந்தளித்த ஓரிரு நாட்களில் முற்றிலுமாக குறைந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் ”இருமலே இல்லை” என்ற நிலை வந்துவிட்டது. அவர் தற்போது இனிப்புகளை எந்தவித தயக்கமும் இன்றி உண்கிறார்!. அவரது கீலாய்டும் மறைந்து விட்டது!! தற்போது வரை ( சுமார் ஒன்றரை வருடங்கள்) அவர் எந்த தொந்திரவும் இன்றி நலமுடன் உள்ளார்.
&&&&&&&&&&&&

புதிய பாதையில் புதிய பார்வை....!


’புதிய பாதையில், ஒரு புதிய பார்வை..!”
(2009 இல் எழுதப்பட்டு வெளியிடப்படாத கட்டுரை)

ஞானமருத்துவம் ஏப்ரல் - ஜூன் 2019 இதழில் வெளியான கட்டுரை


            ஹோமியோபதியில் துயரருக்கு மருந்துத் தேர்வு எவ்விதம் நடைபெறுகிறது..?

            ஒவ்வொரு ஹோமியோபதியரும் தனது அனுபவங்களுக்குத் தக்கவாறு வெவ்வேறு நடைமுறைகளைக் கையாளுகிறார்கள்.

            சிலர் ”போகர்-போகியன்சன்” முறையில் பொதுக்குறிகள், துயர்க் குறிகள், மாறுமைகள் மற்றும் உடனுறைக் குறிகள் போன்ற அனைத்தையும் தொகுத்து ஒற்றை மருந்தைத் தேர்வு செய்வர்.

            சிலர் ”கெண்ட்” முறையில், மனக்குறிகளை முதலில் எடுத்துக் கொண்டு, பின்பு உடல் முழுமைக்குமான குறிகள் (Generalities) உறுப்புக் குறிகள் என்று வரிசைப் படுத்தி மருந்து தேர்வு செய்வர்.

            வித்தியாசமான, பொதுவில் இல்லாத குறிகள் (Uncommon, Peculiar symptoms) ஒரு துயரரிடம் அறியப்படுமானால், மருந்துத் தேர்வு எளிமையானது. மேலும் அக்குறியின் அடிப்படையில் மருந்துத் தேர்வு செய்வதே விவேகமானது.

            இவையெல்லாம் தொல்சீர் (Classical) முறை ஹோமியோபதி.

            அதிலிருந்து சற்று மாறுபட்டு, மருத்துவர்கள் - இராஜன் சங்கரன், வித்துல்ஹாஸ், ஸ்கால்டன், சேகல்  முதலியோர் தங்களது அனுபவத்தினாலும் ஆராய்ச்சிகளாலும்  புதிய முறைகளை மருந்துத் தேர்வில் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வழிகளைப் பின்பற்றுவர்கள் தொல்சீர் முறையல்லாது  தாங்கள் பயிற்சி பெற்ற புதிய முறைகளிலேயே  மருந்துத் தேர்வு செய்து வெற்றி பெறுகின்றனர்.

            இப்படிப்பட்ட பல்வேறு முறைகளில் சற்று வித்தியாசமானது புரட்சிகர ஹோமியோபதி (Revolutionized Homoeopathy) என்று அழைக்கப்படுகின்ற மருத்துவர் சேகல் முறை (ROH).

            மாமேதை ஹானிமன், அவரது ஆர்கனான் மணிமொழி 211, 212 மற்றும் 213 யில் மருந்துத் தேர்வில் மனக்குறிகளின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.

            மேலும் ஆர்கனான் அடிக்குறிப்பு 112..ல்

            ”..ஒரு துயரர் சாந்தமான, அமைதியான, ஒத்துப்போகும் மன இயல்பு உடையவராக இருப்பின் அவரை ‘அகோனைட்டும்’, மென்மையான, மந்த குணமுடையவரை  ‘நக்ஸ் வாமிகாவும்’, பிடிவாதமும், மனமகிழ்ச்சியும் நிறைந்த ஒருவரை ‘பல்ஸடில்லாவும், கலங்காத, பயப்படாத, மனங்குன்றாத ஒருவரை, இக்னேசியாவும், மற்ற உடற்குறிகள் ஒத்திருந்தாலும், ஒருபோதும் குணப்படுத்தாது”  என்கிறார்.

            ஹோமியோபதியின் முன்னோடியான மரு. கெண்ட் ‘மனமே மனிதனின் திறவுகோல்’ என்ற கருத்தை வலியுறுத்தி, “நம்பத்தகுந்த மன்க்குறிகள் கிடைக்குமானால் மற்றக் குறிகளைப் புறக்கணிகலாம்..” என எடுத்துரைக்கிறார்.

            இவ்வாறு, துயரர் ஆய்வில் மனக்குறிகளின் முக்கியப்பங்கு இருக்கும்போது அதைமட்டும் எடுத்துக் கொண்டு மருந்தை நிர்ணயம் செய்தாலென்ன…? என்ற ஆய்வின் அடிப்படையில் உருவானதே மரு. சேகல் முறை.

            மனம் எப்போதும் இயங்கிக்கொண்டே  இருக்கிறது. அது எல்லா நிலைகளிலும் செயல்படுகிறது. மனம் அதன் உணர்வுகளை, வார்த்தைகளாகவும், உடல் அசைவுகளாகவும் வெளிப்படுத்துகிறது – என்ற உண்மையை மரு. சேகல் அவர்கள் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு, அப்படி மனம் வெளிப்படுத்தும்  மனக் குறிகளை, நிகழ்வில் உள்ள (Present), தொடர்ந்து இருக்கின்ற (Presistent),  மேலாதிக்கம் செலுத்துகின்ற (Pre-dominant) குறிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

            இம்முறையில் ஒரு விரிவான மருந்துகாண் ஏடு (Repertory) மட்டுமே,  அதிலும் Repertory இல் உள்ள மனக்குறிகள் பகுதி (Mind section) மட்டுமே போதுமானது.

            மனக்குறிப் பகுதில் உள்ள குறிமொழிகள் (Rubrics) அனைத்தும், அதன்  அகராதிப் பொருள் (Dictionary – meaning) முழுவதுமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, துயரரின் அப்போதைய நடத்தை, அவரது பேச்சு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை Rubric க்காக மாற்றி, ஒற்றை மருந்து (single remedy) தேர்வு செய்யப்படுகிறது. அம்மருந்து ஒரே ஒருமுறை மட்டும் பெரும்பாலும் 30வது வீரியத்தில் அளிக்கப்படுகிறது.

            2009, பிப்ரவரி 28, மார்ச் 1, 2 தேதிகளில் சேலத்தில் மருத்துவர் S.P. விக்டர் ஐயா அவர்களின் R.O.H கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில்  R.O.H மட்டுமே பயிற்சி செய்யும் மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவில் கலந்து  கொண்டனர். அவர்கள் வெளியிட்ட  அனுபவங்கள், தனியே உரையாடும்போது அவர்களிடம் வெளிப்பட்ட R.O.H முறையின் மீதான உறுதி, நலமாக்கலில் அவர்கள் செய்த அற்புதங்கள் ஆகியவையே, இக்கட்டுரையை என்னை எழுதத் தூண்டியது. (அக்கருத்தரங்கை ‘ஞானமருத்துவம்” ஆசிரியர்  மரு. A. இளந்திரையன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது)

            ROH முறையில் ஒரே மருந்தே, மிகக் குறைந்த அளவில் கொடுக்கப்படுகிறது. எளிய நலமாக்கல் விதி ஒன்றும் அதில் அடங்கியுள்ளது. இங்கு ஆர்கனானின் மணிமொழி ஒன்று மற்றும் இரண்டை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

            நம்மை நாடி வரும் துயரர்களின், துயரங்களை வேருடன்  களைந்தெறிந்து மீண்டும் அவர்களிடம் துயர் தோன்றாவண்ணம் நோயற்ற வாழ்வு வாழச் செய்வதே நமது உயர்ந்த பணியும் கடமையும் ஆகும். (மணிமொழி : 01)

            ”நோயாளிக்கு எவ்வகையிலும் துன்பம் நேராமல், நோயற்ற நிலையானது விரைவில் ஏற்பட வேண்டும். முற்றிலும் நம்பத்தகுந்த, எள்ளளவும் தீங்கு செய்யாத, எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டதாய் இருக்க வேண்டும். (மணிமொழி : 02)

            அத்தகைய ஒரு நலமாக்கலே  ROH முறையில் செயல்படுத்தப்படுகிறது. இம்முறையில் ஆர்கானனுக்கு எதிராக எதுவும் இல்லை என்பதே ROH பயிற்சி செய்வோரின் வாதம்.

            என்றாலும், தொல்சீர் ஹோமியோபதியில் கடைபிடிக்கப்படும், மியாசங்கள், மருந்துகள் செயல்புரியும் காலம், உடல்வாகு மருந்துகள் , தொடர் மருந்துகள்(Complimentary), இடை மருந்துகள் (Inter current remedies) போன்ற பாகுபாடுகள் ROH – ல் கிடையாது. மேலும் Totalaity of symptom (Organan ap. No 153) – என்பதை மாற்றி Totality of mind symptoms alone என்று பின்பற்றப்படுகிறது.

            இதெல்லாம் தொல்சீர் (Classical)  ஹோமியோபதியர்கள் ROH ஐ ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம்.

            தொல்சீர் ஹோமியோபதியில், துயரருடன் நீண்ட நேரம் உரையாடி (சிலர் பல மணி நேரம் இதில் செலவிடுகின்றனர்) பல கூறுகளை ஆராய்ந்து மருந்து தேர்வு செய்யப்படுகிறது.

            ஆனால் ROH – ல் சில நிமிட உரையாடலிலேயே  மருந்துத் தேர்வுக்கான குறிகள் கிடைத்துவிடுகிறது. ( பல சமயங்களில் உரையாடாமல் கூட..!)

            இதனையும் தொல்சீர் ஹோமியோபதியர் சந்தேகக் கண் கொண்டும், அலட்சியப் புன்னகையுடனும் பார்க்கின்றனர்.

            ஆனால், மருந்துத் தேர்வு செய்ய இப்படி ஒரு எளிய வழி கண்டுபிடிக்கப்பட்டபின் (அது ஆர்கானான் அடிப்படையில்) நாம் ஏன் பழைய முறையில், மிகக் கடுமையான உழைப்பைச் செலுத்தி, பல கூறுகளையும் ஆரய்ந்து மருந்துத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

            தொல்சீர் ஹோமியோபதியர்கள் ROH ஐ ஏற்கத் தடையாக இருப்பன :

ROH இல்  :
1.    மியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
2.    மருந்துகளின் நட்பு, எதிர், முறிவு, காலம் ஆகியவைகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
3.    தொடர் மருந்துகள், இடைமருந்துகள், நிறைவு மருந்துகள் என்பன கிடையாது.
4.    முக்கியமாக Totality of symptoms எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.. என்பன.

முதலாவது மியாசங்களைப் பார்ப்போம் :
                        மியாசங்கள், ஹானிமன் அவர்களின் கொள்கையில், அவருக்கே ஏற்பட்ட சறுக்கல் என்ற கருந்து பல ஹோமியோபதியர்களிடம் உண்டு. “மியாசம் என்ற கருத்து, ஹானிமன் அவர்களின் வயதான காலத்தில் அவருக்கு ஏற்பட்ட மனக்குழப்பம்..”  - என்று ஹானிமனின் நேரடி சீடர் ஒருவர் கூறியிருக்கிறார்.

            (உண்மையில் மியாசங்கள் (மியாசமா – மயாசமா..?) குறித்த தெளிவு எனக்கு இதுவரை கிட்டவில்லை. சோரா, சிலிஃபிஸ், சைக்கோஸிஸ் என்ற மூன்று  மியாசங்களுடன், பின்நாட்களில் பல வகையான மியாசங்கள் சேர்ந்துள்ளன (கேன்சர் மியாசம், காசநோய் மியாசம்,.ect.,) ஒருவரிடமே பல வகை மியாசங்கள் ஒரே நேரத்தில் காணப்படும் என்றும் (Multiple Miasmas) கூறப்படுகிறது.)

இரண்டாது தொடர், நட்பு மருந்துகள் போன்றன..:
            இவைகுறித்த பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. மேதை நாஷ் அவர்கள். ”குறிகள் ஒத்திருந்தால் நான் மெர்கூரியசுக்குப் பின் சிலிகாவை கொடுக்கத் தயங்க மாட்டேன்..” என்கிறார்.(Leaders in Homoeopathic therapeutics)
மூன்றாவதாக மருந்துகளின் செயல்படும் கால அளவு  :
            Dr. கிபசன் மில்லர் –ன் அட்டவனை ஒன்று இக்கால அளவை சொல்கிறது. என்றாலும் நோயாளியின் ஏற்புத்திறன்;  நோயின் அளவு போன்றவை பொறுத்து அக்கால அளவுகள் மாறுபடுகின்றன. மேலும் தீவிர நோய்களில் (Acute) அக்கால அளவுகள் பொருந்தி வருவதில்லை, என்பதையும் நாம் மறுக்க இயலாது.

நான்காவதாக் தொடர், இடையீடு  (Inter current) மருந்துகள்…போன்ற கருத்துகள் :
            இதற்கு Dr. S.M. குணவந்தே அவர்களின்,  Perceiving Crucial Symptoms புத்தகத்தின் பக்கம் 111 – ல் Dr. F. E . கிளாட்வின், M.D., அவர்களின் குறிப்புரை ஒன்றை நாம் பார்க்க வேண்டும். அதில் அவர்..

            ”….I saw that the so-called ‘indicted remedy’ was only seemingly so and was not the indicated remedy at all, and the so called INTERCURRENT REMEDY AS THE TRULY INCICATED REMEDY. The truly indicated remedy had been masquerading under the name of “inter current remedy..”       என்கிறார்.

            அதாவது ‘இடைமருந்து  என்பது உண்மையில் இடைமருந்தாக இருப்பதில்லை, அதுவே அத்துயரருக்கு பொருந்தி வரும் ஒத்த மருந்தாக இருந்திருக்கிறது” என்பதே அதன் பொருள்.

            மேற்கண்டவைகள் ROH க்கு ஆதரவாக நமது தொல்சீர் ஹோமியோபதியர்கள் தெரிவிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்..!

            ROH இல் மனக்குறிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுவதுதான், அதன் சிறப்புக்கும், எதிர்ப்புக்கும் காரணமாக அமைகிறது.

            தொல்சீர் ஹோமியோபதியில், ‘ஒரு துயரர் இடத்தில் மனக்குறிகள் வெளிக் காணுவது கடினமான ஒன்று” என்பதே தொன்றுதொட்டு கூறப்படும் வழக்கு. மனக்குறிகள் தெளிவாகக் கிடைத்துவிட்டால் துயரரை குணப்படுத்துவது எளிது என்பதே அனைத்து ஹோமியோபதியர்களின் நம்பிக்கையும்.

            அப்படியிருக்க, மனக்குறிகளை எளிதில் வெளிக் கொண்டுவரும், துயரரின் பேச்சு, நடை உடை பாவனை முதலியவைகல மனகுறிகளாக மாற்றும் வழிமுறை (தந்திரம்) ROH இல் இருப்பதால், எல்லா துயரரிடத்து அல்லாது, தொல்சீர் ஹோமியோபதி தோல்வியுறும் (அல்லது அப்படி நம்பப்படும்) இடங்களில் நாம் ஏன் ROHஐ பயன்படுத்திப் பார்க்கக் கூடாது?

            என்றாலும்,  ROH முறையில், துயரரின் வெளிப்பாடுகளை குறிகளாக (Rubric)  மாற்றும் கலையில் (துயரர் மொழியும் ஹோமியோபதி வழியும்..!) தேர்வதற்கு நன்கு பயிற்சிபெற வேண்டியுள்ளது. முதலில் பார்ப்பதற்கு வேண்டுமானால் ROH எளிமையாகத் தோன்றலாம். பயிற்சி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகள் நிறைய உண்டு.

            தனது மருந்துவம் எந்த வகையைச் சார்ந்தது என்று கேட்டபோது, மாமேதை ஹானிமன் அவர்கள், “Mine is an inductive science” என்று பதில் கூறினார்களாம். அதாவது மீண்டும் மீண்டும் செய்து சரிபார்த்துக் கொள்ளும் அறிவியல்.

            எனவே Dr. S.P. விக்டர் ஐயா அவர்கள் கூறுவது போல, “Dr. சேகல் அவர்களின் விளக்கத்தை ஏன்? எப்படி? என்று விவாதப் பொருளாக்காமல், செய்து பார்ப்பதில் என்ன தவறு?
            அவ்வாறு செய்து பார்த்து அது பலனலிக்காவிட்டால் அது தவறு என்று துணிவுடன் அறிவிக்கலாம் அல்லவா..?

          ஹோமியோபதியின்  நம்பகத்தன்மை, அது துயரரை நலப்படுத்துவதில்தான் உள்ளது. அறிவியல் (!) ஆராய்ச்சியில் இல்லை.

            அலோபதியில் ஒரு மருந்தை, அதன் பெயர் தெரியாவிட்டல்கூட, ஆய்வுக்கூட சோதனையில் அதில் உள்ள மருந்துப் பொருட்களின் சேர்க்கையை கண்டுபிடித்து விடலாம்.

            ஆனால் ஹோமியோபதில் அவ்விதம் காண இயலாது. ஏனென்றால்  நம் மருந்துகளில் இருப்பது மருந்தாற்றல் மட்டுமே..!

            எனவே ஆராயாமல், சோதித்துப் பார்காமல், நாம் ROH ஐ கேலிக்குறியதாகக் கருதினால், மற்ற மருத்துவ முறையினர், நம்மை (Classical Homoeopaths) கேலிக்குறியவர்களாகப் பார்ப்பதில் நியாயம் கிடைத்துவிடும்.

            மாமேதை ஹானிமன் அவர்கள், தமது வாழ்நாளில் (89 வருடங்கள்) ஆர்கனனை 5 முறை திருத்தி வெளியிட்டார். ஆறாவது முறையாக திருத்தி அதனை வெளியிடும் முன்பே அவர் காலமானார். அவர் மேலும் பல வருடங்கள் வாழ்ந்திருந்தால் மனக்குறிகளின் முக்கியத்துவத்தோடு மேலும் பல பதிப்புகளை ஆர்கணான் பெற்றிருக்கும்.

            என்வே ROH ஐ ஹோமியோபதின் ஒரு வளர்ச்சியாக நாம் ஏன் பார்க்கக் கூடாது?

            புரட்சிகர ஹோமியோபதி என்று, ROH பயிற்சி செய்பவர்கள், ஹோமியோ மருந்துகளுடன் அலோபதி மருந்துகளை கொடுப்பதில்லை. பல மருந்துக் கலவைகள், பேடண்ட் மருந்துகள் என்று பரிந்துறைப்பதில்லை. ஒரே நாளில் பல வேளைகள் மருந்து கொடுப்பதில்லை.

      ROH  முறையில் பயிற்சி செய்பவர்கள், ஒத்த மருந்து ஒன்றை, ஒரே ஒரு வேளை மட்டுமே கொடுக்கின்றனர். மருந்து வேளை செய்ய நிறைய கால அவகாசம் தருகின்றனர். இவ்விஷயத்தில்  மாமேதை ஹானிமன் அவர்களை அப்படியே பின்பற்றுகின்றனர்.

எனவே, “நல்லது செய்ய ஆற்றீரயினும்…அல்லது செய்யாது ஓம்புமின்..” என்ற புறநாநூற்று வழி நடக்கின்றனர். நம் அவ்வழியில் முயற்சி செய்து பார்பதில் தவறேதும் இல்லையே…!

மீண்டும் நாம் மேதை E.B.  நாஷ் அவர்களிடமே செல்வோம்…

“எல்லாவற்ரையும் சோதனை செய்து பார்…எது நன்றாயிருக்கிறதோ அதனை கெட்டியாகப் பிடித்துக் கொள்..”  -- லைக்கோபோடியம் மருந்தில்.. Dr. E.B.  நாஷ்.

%%%%%%%%%