அதிகம் பயன்பாட்டில் இல்லாத குறிமொழிகள்
ஞான மருத்துவம் ஜனவரி 2019 இதழில் வெளியான
கட்டுரை
-- ஏ.ஆர். வீரராகவன்.
ROH முறையில் நாம்
ஹோமியோபதி மருத்துவத்தை செய்யும்போது ஒரு குறிப்பிட்ட சில குறிமொழிகளே அடிக்கடி தேர்ந்தெடுக்கப்படுவதாக
சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அப்படி அடிக்கடி பயன்படும் குறிமொழிகளை வைத்து மருந்து
தேர்ந்தெடுக்கும்போது அது சமயங்களில் தோல்வியில் முடிவதுண்டு. அப்போது நாம் மருந்துகாண்
ஏட்டில் அக்குறிப்பிட்ட துயரருக்கு, அப்போதய மனநிலைக்கு ஏற்ப பொருந்தக்கூடிய, அதிகம்
பயன்பாட்டில் இல்லாத, குறிமொழிகளை நாம் கண்டறிந்து மருந்து கொடுத்தால் அது வெற்றியைத்
தருகிறது.
அவ்விதமாக, சில புதிய குறிமொழிகளைப் பயன்படுத்தி
வெற்றியடைந்த ஒரு துயரர் வரலாறு :
சுமார் மூன்று வருடங்ளுக்கு முன் ஒரு பெண்
துயரர். வயது 43.
அவருக்கு விடாத இருமல். ஆறு வருடங்களாக இருமலால்
அவதிப் படுகிறார். இருமல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சில சமயங்களில் இருமும்போது
சிறுநீர் கழிந்துவிடுகிறது.
அவருக்கு வேறு சில தொந்திரவுகளும் இருந்தன.
அவருக்கு இனிப்பு ஒவ்வாமை (Sweet Allergy) இருந்தது. அதாவது அவர் எப்போதெல்லாம் இனிப்பு
சாப்பிடுகிறாரோ உடனடியாக சளி பிடித்து தலைவலி வந்துவிடும். மேலும் அவருக்கு முதுகில்
சிறிய அளவில் கீலாய்டும் (Keloid) இருந்தது.
நான் அவருடைய தொந்திரவுகளுக்கு ஏற்பவும்,
அவ்வப்போதய மனநிலைக்கேற்பவும் பிரையோனியா, நக்ஸ் வாமிகா, பெல்லடோனா போன்ற மருந்துகளைக்
கொடுத்து வந்தேன். இதன் மூலம் அவருடைய தொந்தரவுகள் குறைந்தனவே ஒழிய முற்றிலுமாக நீங்கியபாடில்லை.
அத்துயரரின் உறவினர் ஒருவர் அல்லோபதி மருத்துவர்.
அம்மருத்துவரிடமும் துயரர் மருத்துவம் பார்த்துக் கொள்கிறார். என்றாலும் குறிப்பிட்ட
முன்னேற்றம் எதுவும் இல்லை.
அவர் எனது மருத்துவத்திற்கு வரும்போதெல்லாம்
இருமிக் கொண்டுதான் இருப்பார். பலமுறை அவருக்கு மருந்துகளை மாற்றி மாற்றி கொடுத்து
பின் ஒருநாள் அவரது ஒரு குறிப்பிட்ட செயல்பாடு
என் மனதில் வித்தியாசமாகப் பட்டது.
அதாவது, அவர் தனது துயரங்களை விவரிக்கும்
போது சில சமயங்களில் அது Objective
reasanable என்ற குறிமொழியை உணர்த்துவதாக இருக்கும். ஆனால் ஒரு சில நிமிடங்களில்
அவரது வார்த்தைகள் Superstitious என்ற
குறிமொழியை குறிப்பதாக அமைந்திருக்கும். அவருடைய
பேச்சு எப்போது ஒரு குழப்பமானதாகவே இருக்கும்.
இதற்கேற்ற குறிமொழியைத்
தேடும் போது, எனக்கு கிடைத்தவை :
1. Mind, Irrational, alternating
with rationality,
2. Mind, Confusion of mind,
dream, as if in
3. Mind, Speech incoherent.
என்ற
குறிமொழிகளின் அடிப்படையில் அவருக்கு Cann. Ind. 30 ல் ஒரு வேளை மருந்தும், தொடர் மருந்துகள்
15 நாட்களுக்கும் அளிக்கப்பட்டது.
ஆச்சரியப்
படத்தக்க வகையில் அவருடைய இருமல் மருந்தளித்த ஓரிரு நாட்களில் முற்றிலுமாக குறைந்துவிட்டது.
அடுத்த சில நாட்களில் ”இருமலே இல்லை” என்ற
நிலை வந்துவிட்டது. அவர் தற்போது இனிப்புகளை எந்தவித தயக்கமும் இன்றி உண்கிறார்!. அவரது
கீலாய்டும் மறைந்து விட்டது!! தற்போது வரை ( சுமார் ஒன்றரை வருடங்கள்) அவர் எந்த தொந்திரவும்
இன்றி நலமுடன் உள்ளார்.
&&&&&&&&&&&&

No comments:
Post a Comment