Wednesday, May 11, 2016

பாரம்பரியம் என்ற முன்முடிவு

28.09.2015  துயரர் பெண், வயது 45 ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

            ”வாழ்க வளமுடன்....நல்லா இருக்கீங்கங்களா சார்....?”
            ”நல்லா இருக்கேன்........ உட்காருங்க.....”
            ”உங்களைப் பார்க்கனும்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன்...இப்ப டவுனுக்கு வந்தனா....அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போயிடலாம்னுவந்தேன்.....”
            ” அப்படியா என்ன தொந்திரவு....?’
            ”அடிக்கடி  சளி புடிச்சுக்குது....வீசிங்....ராத்திரியில துங்கமுடியல....”
            ”எத்தனை நாளா....?”
            கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இருக்கு சார்.....நான் யோகா கிளாஸ் போனேன்...நல்லா இருந்தது...ஆனாலும் திரும்ப வருது சார்....இருந்தாலும் தொடர்ந்து அவங்க சொல்லிக் கொடுத்த மூச்சுப் பயிற்சியை செய்துகிட்டுதான் சார் இருக்கேன்.....”
            ”அப்படியா...?”
            ”எங்க வீட்டுல எப்பவுமே இங்கலீஷ் வைத்தியத்துக்குப் போகமாட்டாங்க சார்...தூதுவலை துவையல், ஆடாதொடா  கசாயம்-னு ஏதாவது ஒன்னு வைத்து சாப்பிட்டுகிட்டுதான் இருக்கேன்....இருந்தாலும் இங்கலீஷ் டாக்டர்கிட்ட போகிறமாதிரி ஆயிடுச்சு....ரொம்ப முடியாட்டி அவங்க கொடுத்த “பஃப்” இழுத்துக்கிறேன்......”
            ”வேற....?”
            ”வேற ஒன்னும் இல்ல சார்..... இந்தசளிதான்.....அதுவும் ராத்திரி வந்தா வீசிங்.....இதை நிறுத்திட்டா கோடி புண்ணியமா போயிடும்....”(கை எடுத்துக்கும்பிடுகிறார்.)
            ”ஏன் இங்கலீஷ் வைத்தியமே தொடராமில்ல....”
            ”அது சரியா வராதுங்க.....ஏதோஅவசரத்துக்கு அங்க போனேன்....சின்ன வயசுலேர்ந்தே...அப்படிதாங்க....ஜுரம் வந்தாகூட எங்க அம்மா கசாயம்தான் வச்சுக் கொடுப்பாங்க......”
            ’அப்ப ஹோமியோபதிக்கு ஏன் வந்தீங்க.....?”
            ”ஹோமியோபதியலகூட மூலிகைலிருந்துதான் மருந்து தயாரிகிறாங்கனுதான் கேள்விப்பட்டேன்....”
            ”வேற ஏதாவது தொந்திரவுகள் உண்டா....?”
            ”மற்றபடி ரொம்ப நல்லா இருக்கேன் சார்...ஒன்னும் குறைவில்லை...”
தேர்ந்தெடுக்கப்ப்ட்ட குறிமொழிகள்:
            PREJUDICE,  traditional
            DELUSION,    Help calling for,
            PRAYING
            DELUSION, Wealth of.
குறித்த மருந்து Platina
            Platina 30C யில் ஒரு வேளை மருந்தும் தொடர் மருந்துகள் 30 நாட்களுக்கும் வழங்கப்பட்டன.
            சில நாட்களில் துயரர் முழு நலம். தற்போதுவரை எந்தத் தொந்திரவும் இன்றி உள்ளார்.
இங்கு துயர்ரின் மனநிலை PREJUDICE,  traditional முக்கியமாக உள்ளது. அதனால் அவர் DELUSION,             Help calling for, நிலையில் உள்ளார்.
            மேலும் அவர் இங்கலீஷ் மருத்துவத்திற்கு செல்ல விரும்பாத்தை FEAR, Injured being, என்று எடுத்துக்கொண்டால் மருந்து தேர்வில் குழப்பமே வரும். (FEAR, Injured being,ல் Platina கிடையாது!) எனவே துயர்ரின்  State of Mind ஐ நாம் கண்டுகொள்வதில் கவனமாக இருக்கவேண்டும்.
            வாழ்க நலமுடன்!!!!
%%%%%%%%%%%%%%%%

2 comments: