துயரர்
சரிதம் – 1
12.
04. 11
துயரர்
திருமதி.###### எங்கள் தெருவிலேயே
வசிக்கும் 42 வயது பெண்மணி.
சளித்
தொந்திரவு, இருமல், இருமினால் மயக்கம் போன்ற துயரங்கள்.
”உங்களைப் பார்க்க வெண்டும்னுதான்
நினைச்சுக்குவேன்....ஆனா நீங்க ரொம்ப பிஸியாக இருப்பீங்க... அதான் தொந்திரவு
கொடுக்கக் கூடதுன்னு.....தொந்திரவு ஒன்னும் இல்லையே...? (1)
”அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல....எப்ப
வேணும்னாலும் நீங்க வரலாம்... உங்களுக்கு என்ன பண்ணு;துன்னு சொல்லுங்க....”
”சளி ரொம்ப இருக்குதுங்க...xxxxx டாக்டர்கிட்டதான் (பிரபல அலோபதி மருத்துவர்) போனேன்....அந்த மருந்தை
சாப்பிட்டதில்ல இருமல்ல கொண்டுபோய் விட்டுடுச்சு...சளியும் குறைந்தபடில்லை....இருமினா
மயக்கம் வந்துடுது...”(2)
”எததனை நாட்களா இருக்கு இந்த சளி....?”
” ஆறு மாசமா இருக்குங்க.. வீடு வேற கட்டிகிட்டு இருக்கோமுள்ள.. அங்கதான்
நிக்க வேண்டியிருக்கு....சிமிட்டு தூசு....சத்தம் ஒதுக்கல....”(3)
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:
1. Disturbed,
averse being
2. Delusion,
wrong has suffered.
3. Delusion,
Injured by his surroundings.
தேர்ந்தெடுக்கபட்ட மருந்து Naja 30
நஜா 30 ல் ஒரு வேலையும்
தொடர்மருந்துகள் 15 நாட்களுக்கும் கொடுக்கப்பட்டன.
சில நாட்களுக்குப் பிறகு
அவர் என்னை வந்து பார்த்து..” இப்ப ரொம்ப நல்லா இருக்குங்க... எந்த தொந்திரவும்
இல்லை.....எங்க் வீட்டுக்காரருக்கும் (கணவர்)
இதே மாதிரி தொந்திரவு இருக்கு...அவங்களையும் உங்கள வந்து பார்க்கச் சொல்கிறேன்...” என்று
சொல்லிச் சென்றார்.
இங்கு குறிப்பிடவேண்டியது: முந்தய
துயரர் ஆய்வுக்கு மாறாக முறிமொழிகளில் (1)த் தவிர மீதி இரண்டு குறிமொழிகள்
துயரரின் துயரோடு தொடர்புடையவை..
@@@@@@@@@@@@
துயரர் நலமாக்கல் 2:
துயரர்
என்னுடன் பணியாற்றுபவர். ஆண். வயது 52
நீண்ட நாட்களாக தொல்லைகள் பல.
மார்பில் படபடப்பு. உள்ளூர் டாக்டர் Blood Pressure இருப்பதாகக்
கூறி தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்ள அறிவுறை. அடிக்கடி வயிற்றில் வலி
வருவதால் அதற்காகவும் மருந்துகள்.
ஒருமுறை இருதய படபடப்புக்கென்று வேறு புகழ்பெற்ற மருத்துவரை
கலந்தாலோசித்ததில் ‘Eco’ டெஸ்ட் எடுக்க தேதி குறிக்கப்பெற்று இவர் பயந்து செல்லவில்லை.
நாடிப் பரிசோதனையில் இரத்தக்
கொதிப்பு, இருதய நோய் முதலியவைகளை தெரிந்துகொள்ளும் முறையை நான் அறிந்து
வைத்துள்ளதால் அவர் தினமும் என்னிடம் நாடிப் பரிசோதனை செய்து கொள்வார் (சேர்ந்து
பணியாற்றுவதால்).
தூக்கமின்மையும் அவருக்கு
உண்டாததால் தினமும் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டால்தான் தூக்கம் வரும். ஆனால்
அதனல் நாள் முழுவதும் ஒருவித மயக்கம்.
அவரிடம் துயரர் விசாரனை:
”என்ன பிரச்சனை சொல்லுங்க......”
” துக்கம் இல்லாத்தால நாள் முழுவதும்
ஒருமாதிரி இருக்கு....நெஞ்சில் ஒரு வலி எப்போதும் இருக்கற மாதிரியே
இருக்கு......எப்பவும் அதே நினைப்புதான்......வேற என்னமே ஓடமாட்டேங்குது.....”(1)
”அப்புறம்................?”
” இதை எப்படியாவது சரி
செய்யுங்களேன்..........”(2)
”ஆமாம்... நாடியில இருதயத்துல சிறிது
தொந்திரவு இருக்கலாம்னு தோனுது............”
” உங்களால நிச்சயமா இதை சரி செய்ய
முடியுமான்னு சொல்லுங்க......(3)....இல்லாட்டி நான் இரண்டு நாள் ‘லீவ்’ போட்டுட்டு ..அந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டயே போய்
காட்டுறேன்.......”
”நிச்சயம் சரி செய்துடலாம்.....என்னை
நம்புங்க....ஆனா ஒன்னு தூக்க மாத்திரையும் Blood Pressure மாத்திரையையும்
நிறுத்திடனும்....சரியா...?”
என்ற கண்டிப்புடன் மருந்து கொடுத்தனுப்பினேன்.
அலோபதி மருந்துகள் நிறுத்தப்பட்டன.
நமது SL மட்டுமே தொடர்ந்து கொடுக்கப்பட்டது. சில நாட்கள் சென்று அவர் எப்போதும்
மருத்துவம் பார்த்துக் கொள்ளும் அலோபதி மருத்துவரிடம் பார்த்ததில் Blood Pressure அளவு 82 – 124 இருந்தது. அம்மருத்துவர் வியந்து, “
ஆச்சரியமாக இருகே...உங்களுக்கு எப்பவும் இப்படி
இருத்ததில்லையே.......எப்படி....வேறு மருந்துகள் எதுவும் எடுத்துக்
கொள்கிறீர்களா.....? என வினவியிருக்கிறார். துயரர் (தற்போது நலமானவர்..!)
”அதெல்லாம் ஒன்றுமில்லை....நீங்க எழுதிக் கொடுக்கற மருந்து மட்டுந்தான்....” என்று
சொல்ல, “ சரி.... தொடர்ந்து அதயே சாப்பிடுங்கள்...” என அறிவுறுத்தியிருக்கிறார்.
அவர் மருந்தேதும் வாங்காமல் வந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாக அவர் ந்லமுடன்
உள்ளார்.. Blood
Pressure Normal ஆக உள்ளது. அவரது இருதய படபடப்பு சரியான நிலையில்
இருக்கிறது. மேலும் அவருக்கு நிம்மதியன தூக்கம் மாத்திரை எடுத்துக் கொள்ளாமலேயே
வருகிறது.
எடுத்துக் கொள்ளப்பட்ட குறிமொழிகள்:
DELUSION Possessed, Being,
Mood, repulsive,
Fear betrayed being.
கொடுக்கபட்ட
மருந்து: HYOSCYAMUS 30
இப்படிப்பட்ட
அருமையான நலமாக்கலுக்கு வித்திட்ட அமரர் மரு.எஸ்.பி.
விக்கடர் ஐயாவை வணங்குவோம். ஆர்.ஓ.ஹச்-ஐ வளர்ப்போம்.
துயரர் சரிதம் 2
19.02.11
பெயர்:
செல்வி ##### வயது 14
துயரர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்
மாணவி. முகத்தில் திட்டு திட்டான வெண்மை. லேசான அரிப்பு. துயரரின் தாய் அழைத்து
வந்திருந்தார்.
துயரர் புன்முறுவலுடன் வந்தார்.
கன்னங்களில் வெண்மை நிற திட்டுக்கள். அமரச் சொன்னேன். புன்முறுவல் மாறவில்லை (1)
”என்ன படிக்கிறே.....?
”ஒன்பதாவது..............”
”என்ன ரேங்க் வாங்குவே....?”
அதற்கு அந்தப் பெண் பதில்
சொல்லவில்லை. தாயார்தான் பதிலலித்தார்.
”சரியா படிக்க மாட்டேங்குதேங்க....”
”என்ன அப்படியா......? அதற்கும்
த்லையை குனிந்துகொண்டு புன்முறுவல் (2)
(எல்லா
பாடங்களிலும் தேற்சி பெற்வர்களுக்கே ரேங்க் அளிக்கப்படுவது வழக்கம்)
”என்ன தொந்தரவு...?
” அதான் சார் முகத்தில் திட்டு திட்டா
வெள்ளை... அதுக்குத்தான் சார்...” தாயார்தான் பதிலலித்தார்.
”வேற எங்காவது இருக்கா ?”
”கால்ல இருக்கு........”
”என்ன பண்ணுது......?
”அப்பப்ப லேசா அரிக்கும்...?
தேர்ந்தெடுக்கப்பட்ட்ட
குறிமொழிகள்;
1. Smiling,
2. Hide, things
Belladonna 30 ல்
ஒரு வேலையும் தொடர்மருந்துகள் 15 நாட்களுக்கும் அளிக்கப்பட்டன.
மருந்து கொடுத்த மூன்றாம் நாள்
அப்பெண் வேறு இருவரை அழைத்து வந்திருந்தார்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது
முகத்தில் இருந்த வெண்மை திட்டுகள் மறைந்து பழுப்பு நிறமாயிருந்தது.
”இவங்களுக்கு காட்டனம்னு
சொன்னாங்க...அதான் அழைச்சுகிட்டு வந்தேன்... எனக்கு மருந்து முடிஞ்சப்புறம்
வருகிறேன்....” எனறார் அப்பெண்.
மருந்து தீர்ந்து அப்பெண் வந்தபோது
வெண்மையின் சுவடே தெரியவில்லை. தொடர்மருந்துகள் நிறுத்தப்பட்டன.
இங்கு கவனிக்க வேண்டியது: துயரர்
ஆய்வு நேயயைப் பற்றி துவங்கும் முன்னரே நமக்கு வேண்டிய குறிமொழிகள்
கிடைத்து விட்டன. இப்படி ஒரு அருமையான முறைக்கு வழிகாட்டிய குருநாதர் அமரர்.Dr. S.P. விக்கடர் ஐயாவை நன்றியுடன் நினைவுகூர்வோம்.
&&&&&&&&&&&