அரிய குறிமொழியின் அற்புத ஆற்றல்
ஆர்.ஓ.ஹச் முறையை நாம் கையாண்டு
மருந்தளிக்க ஒற்றை மருந்துக் குறிகள் அவ்வப்போது நல்ல பலன்களைத் தருவது கண்கூடு.
Fear, extravagance என்ற குறிமொழி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பிரபலமான குறிமொழி. அக்குறிமொழிக்கான
ஒற்றை மருந்தான ’ஓப்பியம்’ நம்மை எப்போதும் கைவிட்டதில்லை !
அதுபோன்று, Delirium, Terror expression of. (Bell); Clinging to
promises (Gel); Gestures, folding hands,(Puls); Gestures, actor like,(Hoys) போன்ற பல்வேறு ஒற்றை மருந்துக் குறிகள்,
நமது மருந்துத் தேர்வை மிகவும் சுலபமாக்கிவிடுகின்றன.
ஆனால் மேற்கண்ட , நம்மால்
அதிகம் பயன்படுத்தப்படும் குறிமொழிகள் தவிர, நாமே தேடிக்கண்டுபிடித்த ஒரு தனித்த
குறிமொழியால் துயரர் குணமடையும் போது நாம் அடையும் ஆனந்தமே தனிதான்.
துயரர்
நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி. அவளது தாயார் அழைத்து வந்திருந்தார்.
அச்சிறுமிக்கு எப்போதும் வயிற்று வலி,
வாய் முழுவது புண், ”சாப்பிடவே மாட்டேன்
என்கிறாள்” என்றார் அவளது அம்மா. “ கடந்த சில மாதங்களாக இங்கிலீஷ்
வைத்தியம் பார்த்து வருகிறோம்.....ஒன்றும் சரியாகவில்லை.....” என்றார். மேலும் அவள் தூங்கும்போது அடிக்கடி
விசித்தல் போல மூச்சுத் திணறுவதாகவும் கூறினார்.
நான் ஆர்.ஓ.ஹச் பாணியில் துயரரை போச வைக்க, அச்சிறுமியிடம் கேள்விகள்
கேட்டேன். ஆனால் அச்சிறுமி, ஏதும் பேசாமல் அவளது அம்மாவையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.
தாயார் மீண்டும் என்னிடம் பேச ஆரம்பித்தார். நான்,
” நீங்கள் சற்றுப் பேசாமல் இருந்தகள்…..அவள் பேசட்டும்….” என்றேன்.
”பாப்பா….நீயே உனக்கு என்ன
பண்னுதுன்னு சொல்லேன்….” என்றார் அவளது தாய். அதற்கும் அச்சிறுமியிடமிருந்து பதில் ஏதும் இல்லை.
சரி…சார்..நான் வெளியில இருக்கேன்…அப்பவாவது இவள் ஏதாவது சொல்கிறாளா என்று பார்ப்போம்….”
எனக் கூறி அந்த அம்மா வெளியில் சென்று அமர்ந்து கொண்டார். அபோதும் அச்சிறுமி அம்மாவின் கையைப் பிடித்து லேசாக இழுத்தாளே தவிர வாய் திறந்து
ஏதும் பேசவில்லை.
பிறகு அந்தப் பெண்ணிடம் நான் மீண்டும்,”உன் பெயர் என்ன?.”....”உங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடந்து
விட்டதா?”....உனக்கு என்ன பண்ணுகிறது….?” போன்ற சாதாரண வினாக்களை கேட்டேன். அச்சிறுமியிடமிருந்து
ஒரு பதிலும் இல்லை.
இம்மாதிரி நிலைகளைல் தொன்மை ஹோமியோபதிகளால்
(Classical Homoeopaths) ஒன்றுமே செய்ய இயலாது. எந்த மருந்தையும்
நிர்ணயிக்க இயலாது. நோயாளி மீதும், அவரை அழைத்து வந்தவர் மீதும் கோபப்பட மட்டுமே முடியும்!
ஆனால் நாம் நமது ஆசான் சேகல் வழியில்,
அச்சிறுமி எந்த நிலையிலும் பேசாமல் இருப்பதை
ANSWERS, Hardly என எடுத்துக் கொண்டு பார்த்தால் ஐயோடியம் மட்டுமே
மருந்தாக வந்த்து. அதனை சரி பார்க்க அப்பெண்ணின் நடவடிக்கைகளை TIMIDITY, bashful என பார்த்தால் அதிலும் ஐயோடியம்
இருந்தது.
ஐயோடியம் 30 (Ioidum 30)ல் ஒரு வேளையும் 7 நாட்களுக்கு தொடர் மருந்தும் கொடுத்தனுப்பினேன்.
மறுநாளே அச்சிறுமியின் தொந்திரவுகள் அனைத்தும் நன்கு குறைந்துவிட்டதாக
அச்சிறுமியின் தாயார் தெரிவித்தார். தொடர்ந்து மருந்துகள் எடுத்து வந்ததில் (தொடர்
மருந்ததுகள்தான்) அச்சிறுமி நன்றாக குணமடைந்து விட்டதாகவும், மேலும் அச்சிறுமி முன்பெல்லாம்
எதிலும் சோம்பாலாக, மிகவும் மெதுவாகவே அவளது செயல்களைச் செய்வாள் என்றும், தற்போது
அவளது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும்
சந்தோஷப்பட்டார்.
சாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
மருந்து, அத்துயர்ரின் அனைத்து நிலைகளையும் சரியாக்கி முழுமையான குணமாக்களை (Compete Cure) நிகழ்த்திருப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
நாமும் சந்தோஷப்படுவோம்,
அறிந்திருப்பதற்காக!!. நன்றி கூறுவோம் நமது ஆசான்களுக்கு!!
^^^^^^^^^^^^^^^^^^
No comments:
Post a Comment