Saturday, January 3, 2015

எப்படி குணமாகிறது ஹோமியோபதி

எப்படி குணமாகிறது ஹோமியோபதி

                 ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளரமருத்துவச் சீர்திருத்தவாதிஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் ஒரு சிரஞ்சீவி (1755-1843). அவர் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும் இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது. எனவே ஹானிமன் இன்றும் வாழ்கிறார்.

         1810 
இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலை வெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாகஅலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும்ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்றமறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும் போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சில மருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது. ஹானிமன் இன்றும் வாழ்கிறார்!

       ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும் இருந்த காலத்தில் பஞ்சாபவங்காளம்தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்கஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கென தனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

      ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப் பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவுஉடைஉறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

        நேர் மருத்துவத் தத்துவம் மிகக் குறைந்த அளவு மருந்தை வலியுறுத்துகிறது. வீரியப்படுத்தப்படும் (Potency Drugs) மருந்தைக் கொடுக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட (Proved on Human Beings) மருந்துகளின் குணங்கள் நிரந்தரமானவை. மனநோயாளிகளிடம் இரக்கம் காட்டியவர் ஹானிமன். ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் குணப்படுத்துவது இயற்கை விதிகளுக்கு மாறுபாடானது. மனிதனின் கனவுக் குறிகள் உட்பட உடலை நுணுக்கமாக ஆராய்ந்து பதிவு செய்த பின்தான் ஹோமியோபதி மருத்துவர் மருந்தை நாடுவார். மருந்துகள் அனைத்தும் இனிப்பு உருண்டைகள் வடிவில்தூய வெண்ணிறத்தில் அமைந்துள்ளது. இது ஹோமியோபதிக்கே உரிய தனிச்சிறப்பு. சிக்கனம் இதன் அடிப்படையான பலம்.

       இஞ்செக்ஷனஆபரேஷன்விலை உயர்ந்த மருத்துவக் கருவிகள்பரிசோதனைக் கூடங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சிகிச்சை செய்வது அலோபதி மருத்துவம். நோயாளிகளைப் பரிசோதித்து விட்டு மருந்தைக் கொடுத்து ஒரு ஹோமியோபதி மருத்துவர் குணப்படுத்திவிட முடியும். ஆனால் எதிர் மருத்துவத்தில் பல விதமான நவீனக் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி சிகிச்சை செய்ய முடியாது! இது கண்கூடாகக் காணும் உண்மை.

      ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியகிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில்வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்ப மறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம்ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


Friday, January 2, 2015

ஹோமியோபதியின் எளிமை


அட நம்ம ரஸ்டாக்ஸ்தாங்க...!
17.11.14
            துயரர் எனக்கு மிகவும் அறிமுகமாவர்.  பொது நல அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்.  அந்த அமைப்பின் சார்பில் மாநில அளவிலான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்வது குறித்து என்னுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது,
            ” கிட்டத்தட்ட ஒரு வாரமா நாளா சளியாக இருக்கு(1)...... ஃபிரீயாவே இருக்க முடியல....மருந்து கொடுங்க....19 ஆம் தேதிக்குள்ள சரியாயிடனும்(2)........”  என்றார்.
            நான் மருந்து தேர்வு செய்து கொடுத்துவிட்டு, அவருடன் முகாம் செய்திகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். 
            சிறிது நேரத்தில்... “ சார்... என்ன மருந்து கொடுத்தீங்க....?....உள்ளுக்குள்ள ஏதோ கரையிற மாதிரி இருக்கு....நல்லா ரிலீஃபா இருக்குங்குக.....”என்றார்.
*         *        *         *        *         *          *
மீண்டும் அவரை நான் சந்தித்த போது,...’கீழ் முதுகுல லேசா வலி இருக்குங்க....” என்றார். ”யூரின் எப்படிப் போகுது......?”  என்று கேட்டேன் நான்.  “ நீங்க மருந்து கொடுத்த மறுநாள் கருப்பா ரெண்டு தரம் போச்சுங்க.... இப்ப நார்மலா இருக்கு...” என்றார். ”அப்படியா...நான் கொடுத்த மருந்தை மட்டும் (SL)சாப்பிடுங்க...இந்த முதுகுவலியும் சரியாயிடும்.....” என்று அவருக்கு சொல்லி மீண்டும் இரு நாட்கள் கழித்து அவரிடம் விசாரித்த்தில்....”ஒரு தொந்திரவும் இல்லை.....நன்றாக இருக்கிறேன்...” என்ற பதில் வந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமொழிகள்:  (1)DELUSION, Injury, injured is being,
                                                  (2) CARRIED, Desire to be fast.
மருந்து......? அட நம்ம ரஸ்டாக்ஸ்   தாங்க...!
மேலிரண்டு குறிமொழிகளும் நாம் அடிக்கடி கணும் துயர் மொழிகள்: ரஸ்டாக்ஸ் 30 மேற்கண்ட துயர்ரை எளிமையாகவும், முழுமையாகவும் குணமாக்கியுள்ளது.  முதுகில் ஏற்பட்ட வலி, கருப்பான சிறுநீர் ஆகியவை கழிவு நீக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. துயரர் இந்நாள் வரை நலம்.
            இப்படிப்பட்ட Acute  நிலைகளில் Ready Reckoner போன்று குறிமொழிகளையும் மருந்துகளையும் இணைத்து நாம் குறிப்புகளை வைத்துக் கொண்டால் வெற்றிகள் நமதே.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

 



பல்வலி – அனுபவம் பலவிதம்

பல்வலி அனுபவம் பலவிதம்

            ஹோமியோபதியில் தனித் துயருக்கான மருந்து கொடுப்பது ஏற்புடையதல்ல.  என்றாலும் சிலசமயங்களில் குறிப்பிட்ட நோய்க்கென்று மருந்து கொடுப்பதில் ( ஒற்றை மருந்து மட்டும்) தவறேதும் இல்லை என்றே மாமேதை ஹானிமன் தொடங்கி, நமது நாட்டின் ஹோமியோபதி மருத்துவ கலஞ்சியமாகத் திகழ்ந்த திரு. எஸ்.எம். குணவந்தே வரை கூறியுள்ளனர். அவரின் Introduction to Homoeopathic prescribing என்ற புத்தகத்தில்  near specific என்றே பல மருந்துகளைப் பட்டியலிடுகிறார்.

            குறிப்பாக நாம் அன்றாடம் சந்திக்கும்   ’பல்வலி’  துயரர்களுக்கு, நான் பயன்படுத்தும் சில specific மருந்துகளையும், முன்பு Classical Homoeopathy யில் பல்வலிக்கு மருந்துகள் கொடுத்த அனுபத்தையும், தற்போது மனக்குறிகளை மட்டும் பயன்படுத்தி பல்வலியைக் குணப்படுத்திய அனுபத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
           
            பல்வலி,  பூச்சிப் பல் என்று வருபவர்களுக்கு வேறு குறிகள் ஏதும் அகப்படாவிட்டால் பிளண்டங்கோ 6 ல் ஒரு வேளையும், தொடர்மருந்து சில வேளைகளும் கொடுத்தனுப்புவேன். பெரும்பான்மையாக சரியாகிவிடும்.

இப்படி பல்வலியுடன் வரும் ஒரு  சில துயரர் அனுபவங்கள்:

            ஒருமுறை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மனி பல்வலி என்று வந்தமர்ந்தார்.  பல் சொத்தயாகி வலிப்பதாகக் கூறினார்.  பெண்கள் பல்வலி என்றுவந்தால் நான் கேட்கும் கேள்வி:  ”வெள்ளைப்படுகிறதா...............? “ என்பதாகும். இதைக் கேட்டதும் சற்றே அதிர்ச்சியுற்றவராக.  .”ஏன் கேட்கறீங்க.....? எனக்கு பல்வலிக்கு மருந்து கொடுத்தா போதும்..” என்றார்.

”அந்தத் தொந்திரவு இருக்கிறதா என்று சொல்லுங்கள்..?” என்று மீண்டும் கேட்டேன்.

“அதுவும் இருக்கிறது... அதுக்கு வேறு ஒரு லேடி டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்கிறேன்..... எனக்கு பல்வலி.......? என்று இழுத்தார்.  நான் அப்போது கிளாசிக்கல் ஹோமியோபதி செய்து கொண்டிருந்ததால் இதுபோன்ற கேள்விகள் கேட்பதுண்டு !

“ சரி... அது படும் இடங்களில் அரிக்கிறதா....? என்றேன். இதனால் மேலும் திகைப்படைந்த அவர்,  “ ஆமாம்.... அதுக்கென்ன இப்ப..? என்று சற்றே எரிச்சலுடன் பதிலுரைத்தார்.

நான் கிரியோசாட்டம் 30 ல் ஒரு வேளையும் PL  ஒருவாரத்திற்கும் கொடுத்து, ஹோமியோபதியின் ஒருசில அடிப்படைகளையும் எடுத்துக் கூறி அவரை அனுப்பிவைத்தேன்.

சில நாட்களில் என்னை சந்தித்த அவர், புன்சிரிப்புடன், தனது பல் வலியுடன் பலவருடங்களாக அவதிப்பட்ட வெள்ளைப்படுதலில் இருந்தும் விடுதலை அடைந்ததாகத் தெரிவித்தார்.

இப்படி சில அனுபவங்கள் என்றால், நான் ஹோமியோபதி தெரிந்து கொண்ட ஆரம்ப காலத்தில் பல் வலிக்கு எனக்குத் தெரிந்த ஒரே மருந்து காஃபியா குரூடா தான் !  பல்வலி என்று சொன்னால், வாயில் குளிந்த நீரை வைத்துக் கொள்ளச் சொல்வேன், வலி குறைந்தால் காஃபியா வைக் கொடுத்துவிடுவேன். பலமுறை பயன் தந்திருக்கிறது.

பல்லின் மேற்பகுதி நன்றாக இருந்து, அதன் அடிப்பகுதியில் ஏற்படும் சொத்தைக்கு  “மெஸாரியம்” நன்கு வேளை செய்வதாக பாண்டிச்சேரி                மரு. மர்சியால் எழுதுகிறார்.  இதுவும் பலமுறை நமது அனுபவத்தில் பலன் தந்திருக்கிறது. அம்மாதிரியான நிலைகளில் பல்வலி நிற்பதோடு பல் முழுமையும் சீர் செய்து விடுவத்துதான் அம்மருந்தின் ஆச்சரியம்!

பல்வலியுடன் அந்த இடம் அழற்சியுற்று இருக்குமானால் ‘மெர்கூரியஸ்” சிறந்த பலன் தருகிறது. அதேநிலமையில் வலியின் தன்மையை வைத்து “அபிஸ் மெலிஃபிகா” வ்ம் நல்ல பலனலிக்கிறது.
           
            இது இப்படியிருக்க, மனக்குறிகளை மட்டும் வைத்து மருந்தளிக்கும் முறையில், நாம் இது போன்ற துயரர் வார்த்தைகளைக் கேட்கலாம்:

            ”இரண்டு நாட்களாக பல் வலிச்சுகிட்டே இருக்குங்க.......உடனே நிக்கற மாதிரி மருந்து கொடுங்க.....”( 1.DELUSION, Injury, Injury is being,  2. CARRIED desire to be fast)  RhusTax  மருந்தாக வருகிறது.

            ”பல்வலி வந்துடுச்சுனா.. அதே சிந்தனையாவே இருக்கு... வேறு ஒன்றும் செய்ய முடியல.......” “ ரொம்பத் தொந்திரவாக இருக்கு....”(2.DELUSION, Possesses of being, 2. DISTRUBED  averse being) Belladonna மருந்தாக வருகிறது.

            வாயைத் திறந்தால் பல் வலிக்கும்  என்பதால் வாயைத் திர்றக்காமல், வலியினால்...ஸ்...ஸ் என்று அரற்றும் துயரருக்கு , FEAR of suffering of  மற்றும் SENSITIVE, Painful, sensitiveness, to என எடுத்தால்  Spigelia மற்றும்  Coffia Cruda வும் மருந்தாக வரும். மற்றக் குறிகளை கவனித்து உரிய மருந்து கொடுக்கலாம்.

            ”வலி தாங்க முடியவில்லை..சார்...” என்றும் , “ சாப்பிடும் போது வலி அதிகமாகிறது...அதனால் சாப்பிட பயபடும் துயரருக்கு,  1.IMPATIENTS, Pain from 2. FEAR of suffering of  என குறிகளைக் கணக்கிலெடுத்து, CHAMOMILLA  வை மருந்தாக கொடுக்கலாம்.

            எப்படி இருப்பினும் பல்வலி என்று வரும் துயரர்களுக்கு எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக குணம் தெரிந்தால் நமது புகழ் உச்சமடையும்.


@@@@@@@@@@@@@@

Thursday, January 1, 2015

என்றென்றும் ஹோமியோபதி

என்றென்றும் ஹோமியோபதி


            ஹோமியோபதியில் கோடைக்கால நோய்களுக்கான மருந்துகள் குறித்து ஒரு கட்டுரை எழுத நண்பர்  பணித்தார்.

            கோடைக்கால  மருந்துகள் என்றால்....?

            கோடைக்காலத்தில் மட்டுமே அல்லது கோடைக்காலத்தில் அதிகமாக பயன்படும் மருந்துகள் என்ன என்று யோசிக்கும்போது,  ஒரு மருந்து கூட எனக்கு நினைவுக்கு வரவில்லை. நானும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமியோபதி மருந்துகளுடன், மருத்துவத்துடன் தொடர்பில் இருக்கிறேன். என் கண் முன் ஒரு ஹோமியோபதி மருந்தும் ‘கோடைக் கால’ மருந்தாக தென்படவில்லை!!!

            கோடைக்காலத்தில் மட்டுமே ஒரு சில நோய்கள் தோன்றுவதாகக் கூறுவர். அவை, சின்னமை (Chicken Pox) கண் அகழ்ச்சி(Madras Eye) வேனல் கட்டிகள், சூரிய தாக்குதல் போன்றவை. கோடைக்காலத்தில்தான் சிலவகை தொற்று நோய்களும் வேகமாகப் பரவக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லுவர்.

            ஆனால் அவைகளுக்குக் கொடுப்பதெற்கென ஹோமியோபதி முறையில் என்ன என்ன மருந்துகள் கொடுக்கலாம் என்பதைப் பட்டியலிட முடியுமா??

            அப்படிப் பட்டியலிடப்பட்டவை ஹோமியோபதி மருந்துகள் ஆகுமா? அப்படிப் பரிந்துரைப்பவர் ஹோமியோபதி மருத்துவர் ஆவாரா???

            ஒருவர் ஹோமியோபதி மருந்துகளைக் கையாளுவதால் மாடுமே அவர் ஹோமியோபதி மருத்துவர் ஆகிவிடுவாரா???

            அலோபதி(M.B.B.S) படித்து அலோபதி மருந்துகளைக் கையாளுவதால் ஒருவர் அலோபதி மருத்துவர் ஆகிறார்.                 (அதாவது “டாக்டர்!”). சித்தாவோ (B.S.M./S) ஆயுர்வேதமோ (B.A.M.S) படித்து அம்மருந்துகளைக் பரிந்துரைக்கும் திறன் பெற்றவர்கள் முறையே சித்த மருத்துவர் எனவோ, ஆயுர்வேத மருத்துவர் எனவோ அழைக்கப்படுவர். இதுபோல மற்ற மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும். இதில் எந்த கருத்து வேறுபாடுகளுக்கும் வாய்ப்பிலை.

            ஆனால் ஒருவர் ஹோமியொபதியில் பட்டமோ பட்டயமோ பெற்று, அவரிடம் நோயென்று வருபவர்களுக்கு ஹொமியோபதி மெட்டீரியா மெடிக்காவில குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளைக் கொடுப்பதினால் அவர் ஹோமியோபதி மருத்துவர் ஆகிவிடுவார?

            இதற்கு சரியாக பதில் தெரிந்தால்தாம் நாம் ஹோமியோபதியில் உள்ள கோடைக்கால மருந்துகள் குறித்து குறித்தோ பேசவோ அல்லது பேசாமல் இருக்கவோ முடியும்!

            ஹொமியோபதி மருத்துவத்தில் நோய்கள் உண்டா?  நோய்க்கென்று மருந்துகள் உண்டா?

            ”உனது நோயின் பெயர் எனக்கு வேண்டாம். எனது மருந்தின் பெயர் உனக்குத் தெரிய வேண்டாம்” என்பது ஹோமியொபதியை நம்க்கு அருளிய ஹானிமன் வாக்கு. ஆனால் அவரே “உலகில் தோன்றும் எந்த ஒரு நோய்க்கும் ஹோமியோபதியில் தீர்வு உண்டு” என்கிறார்..

             அதாவது நமது மருத்துவத்தில் நோயே (நோய்க்குப் பெயரே) கிடையாது!. அனால் துயரருக்கென்று மருந்துகள் உண்டு.

            இவர் பிரையோனியா....இவர் ஸ்டானம்....இவர் சல்பர்...போன்று.

            இப்படி நோயே இல்லாதபோது கோடைக்கால மருந்துகால மருந்தௌகள் என்று எங்கே இருக்கும்?
           
            ஹோமியோபதியின் தனித்துவமே இதுதானே?  இதனால்தானே மற்ற எந்த மருத்துவ முற்யோடும் ஒப்பிட முடியாத உன்நதமாக ஹோமியோபதி இருக்கிறது. அலோபதி மருத்துவத்தில் நோயின் பெயர் தெரியாமல் அதனைக் குண்மாக்க(!) முடியாது. அக்கண்னோட்டத்துடன் நாம் ஹோமியோபதியை அனுகுவதின் அவலம்தான் “ஹோமியோபதியில் சுகருக்கு மருந்திருக்கா..? என்பது போன்ற வினாக்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

            அலோபதியில் வழங்கபபடும் Paracitamol 250mg Paracitamol 500mg, Paracitamol650 mg ஐ அகோனைட் 6, அகோனைட் 30, அகோனைட் 200  உடன் ஒப்பிட முடியுமா? அவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஹோமியோபதி அறியாத ஒருவருக்கு புரிய வைக்க முடியுமா?

            அவ்விதம் எந்த ஒரு வகையிலும் ஹோமியோபதியை மற்ற மருத்துவ முறைகளுடன் ஒப்பிட முடியாது. அப்படியிருக்க ஹோமியோபதியில் சில குறிப்பிட்ட நோய்களுக்கென்று மருந்துகளை பட்டியலிட்டு கட்டுரை எழுதுவதும், புத்தகங்கள் வெளியிடுவதும் எத்தகைய அபத்தம்!.

            ஹோமியோபதியின் தனித்துவமே,  துயரரைத் தனிமைப் படுத்துவதில்தான் இருக்கிறது. அவருக்கென்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்தை, குறைந்த அளவு, ஒருவேளை மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பதே இங்கு தாரக மந்திரம்.

            ஹானிமன் அறிவுறுத்திய தொல்சீர் முறையாகட்டடும், மனக்குறிகள், பொதுக்குறிகள், மாறுபாட்டுக் குறிகள் என்ற வரிசையில் மருந்து தேர்ந்தெடுக்கும் மரு. கெண்ட் முறையாகட்டும். மனதிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் மரு.சேகல் முறையாகட்டும், துயரர்களின் உணர்வுகளை ஆராயும் மரு இராஜன் சங்கரன் முறையாகட்டும், மருந்துகளின், குறிப்பாக தனிமங்களின் தன்மையை வகைப்படுத்தி மருந்து தேர்ந்தெடுக்கும் ஜான் ஸ்கால்டன் முறையாகட்டும் எதிலுமே மருந்துகள்  கொடுக்கப்படுவதில், SINGLE REMEDY,  MINIMUM DOSE என்பதில் உண்மை ஹோமியோபதியர்கள்  மாறுபடுவதில்லை.

            சமீபத்திய ஆரய்ச்சிகளின்படி அலோபதியில் பயன்படுத்தப்படும் “ஆண்டிபயாடிக் மருந்துகள் அதன்பயன்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.  அத்தகைய ஆராய்ச்சிகள், “பல நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்றுவிட்ட நிலையில் சிறிய காயங்கள். சாராரண தொற்றுகள், இவற்றிலிருந்துகூட நாம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாத, அவர்கள் அதற்கு பலியாகும் பரிதாப நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்க்கும்  ஆண்டிபாயாடிக் மருந்துகல் பயனற்றவையாகி விட்டன..” என்பது அலோபதி டாக்டர்களின் சமீபத்திய கவலை.

          அதாவது, அம்மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலை பாக்டீரியாக்கள் பெற்றுவிட்டன. சுருக்கமாக சொன்னால் ஆண்டிப்யாடிக்குகள் கண்டுபிக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைக்கு ஆங்கில மருத்துவம் சென்றுவிட்டது!! என்பதே உண்மை.”

          ஆனால் ஹோமியோபதி மருந்துகள் அப்படிப்பட்டவையா....? ஹானிமனால் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட ‘பெல்லடோனா’வைத்தான் நாமும் இப்போதும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறோம். ஹோயோபதியில் பயன்படுத்தும் ஒரு அகோனைட்-டின் செயல்பாடோ, சல்பரின் செயல்பாடோ, முன்பிருந்ததை விட குறைந்து போய்விடாதாக யாரும் சொல்லிவிட முடியாது.  சித்த அல்லது ஆயுர்வேத மருத்தௌவத்தில் கூட மருந்து தாயரிக்கப்படும் மூலப் பொருட்கள் தரம் குறைந்ததினால் அம்மருந்துகள் வீரியம் இழப்பதாக கூற முடியும்.

            ஆனால் ஹோமியோபதியில் அப்படியா....? ஏனென்றால் நாம் கொடுப்பது மருந்தல்ல,  மருந்தாற்றல்.

            ஆம், மருந்துகள் கொடுத்து குணப்படுத்தும் எந்த ஒரு மருத்துவ முறையுடனும் ஹோமியோபதியை ஒப்பிட முடியாது. அவர்கள் கொடுப்பவை மருந்துகளின் பருப் பொருள்.  நாம் கொடுப்பது மருந்தாற்றல். ஆடாதொடை சளித்துயருக்கு மருந்தாக சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படும். ஆனால் ஜெஸ்டீசியா ஆடாதொடா 30C  ஹோமியோபதி மருந்தில் மருந்தின் பருப்பொருள் எத்தனை சதவீதம் ..?   விடை 0%.. ஹோமியோபதியின் பால பாடம் படித்தவர்களுக்குகூட அதன் காரணம் தெரியும். ஜெஸ்டீசியா ஆடாதொடா   சளித்துயருக்கு மட்டுமா ஹோமியோபதியில் மருந்தாகப் பயன்படுகிறது. அல்லது நம்மிடம் வரும் சளித்துதுயரர் அனைவருக்கும் அது ஒன்றே மருந்தாகிவிடுமா?

            ”சுகருக்கு ஹோமியோபதியில் மருந்திருக்கா..? என்கிற ஒரு கட்டுரை நமது ‘இயக்கயியல்”  இதழில் வெளிவந்தது. சுகருக்கு என்ன சாதாரண காய்ச்சலுக்குகூட நமது ஹோமியோபதியில் மருந்தில்லை.!!!

            ஆம்.... காய்சலால் அவதிப்படும் துயரருக்கே நாம் மருந்தளிக்கிறோம். அது சாதாரணக் காய்சாலாக இருந்தாலும் சரி. உலகையே ஆட்டிப் படைக்கும் பன்றிக் காய்ச்சலாக ((Swine flue) இருந்தாலும் சரி


        பெயரே தெரியாமல் பரவும் மர்மக் காய்ச்சலாகட்டும், தெரிந்தேக் கொல்லும் புற்றாகட்டும் அதனால் துயரப்படுவோரைக் காப்பாற்ற வல்லது ஹோமியோபதி. ஹோமியோபதியில் நோயின் பெயருக்கோ. நோய் நிலைகளுக்கோ மருந்தில்லை, -அது கோடைக் காலத்தில் வருவதாக இருந்தாலும், குளிர் தாக்குவதால் வருவதாக் இருந்தாலும்!! எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் துன்புருவோருக்கு நிவாரணமளிப்பது ஹோமியோபதிதான். வின்வெளிக்குச் செல்பவர்களுக்கு அங்கு அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனதளவிலான துயரங்களுக்கு ஹோமியோபதியே நிவாரணமளிக்கிறது என்ற செய்தி ந்ம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். ஏன் அங்கு “பெரியண்ணன்” அலோபதி பயன்படுவதில்லை??  அலோபதி மருந்துகள் வளிமண்டலத்திற்கு வெளியே பயனற்றுப் போகின்றன.

            இதைத்தான் மாமேதை ஹானிமன் அவர்கலள் “உலகில் தோன்றும் எந்த் ஒரு நோய்க்கும் ஹோமியோபதில் தீர்வு உண்டு” என்கிறார். ஹோமியோபதிக்கென்று தனியான நோயறியும் முறையும்( தனிப்பட்டவருக்கான மருந்து நிர்ணயம் செய்யும் முறை) அதற்கான் காரணிகள் பற்றிய் மாறாத கொள்கையும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) ஹோமியோபதி பாடத்திட்டத்தில் கலக்கப்பட்டதின் விளைவாக, இன்றைக்கு பட்டம் பெற்ற ஹோமியோ மருத்துவர்கள் பலர் ஹோமியோபதிக்கு துளியும் சம்பந்தமில்லாத, லேப் ரிப்போட்டுகளையும். பரிசோதனை அறிக்கைகளையும் நம்பி, பல நோய்களுக்கு ஹோமியோபதியில் தீர்வில்லை என்று கூறிவிடுகிறர்கள். இதற்குத்தான் நமது அரசாங்கமும் வழிகாட்டுகிறது. பொதுவாகவே மாற்று மருத்துவத்திற்கான பாட திட்டத்தை சுயமாக தயாரிக்காமல், ஆங்கில மருத்துவ கலப்போடு அரசு கொண்டு செல்கிறது எனபதை நாம் புரிந்து கொள்ள் வேண்டும் (இது மருத்துவத்தில் உள்ள அரசியல்!)

            எனவே உலகில் இதுவரை தோன்றியிருக்கும் நோய்களுக்கும் .இப்போது வந்து கொண்டிருக்கும் “மர்மக் காய்ச்சல்”களூகும் இனி தோன்றக்கூடிய எந்த வகை ”பூதங்களுக்கும்” ஹோமியோபதியில் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையுடன் உண்மை ஹோமியோபதியர்களாக செயல்படுவோம்.

எங்கும் ஹோமியோபதி.....என்றென்றும் ஹோமியோபதி..


%%%%%%%%%%%%%%