Thursday, May 25, 2017

குறிகளின் முழுமை (Totality of Symptoms)
                ஹோமியோபதி மருந்துத் தேர்வில் முக்கியமானது துயரர் ஆய்வு. துயரர் ஆய்வில் துயரர் வெளிப்படுத்தும் ஒட்டு மொத்த மனக்குறிகளின் மூலமே  தக்க மருந்தளித்தால்தான் நலமாக்கல் மென்மையாகவும் விரைவாகவும் நிரந்திரமாகவும் நடைபெறுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ROH–முறையில் நாம் நிலைத்து, நீடித்து, நிலையாதிக்கம் செய்கின்ற குறிகளின் தொகுப்பில் சுட்டிக்காட்டப்படும் மருந்தை நாம் தேர்வு செய்வது மிகவும் அவசியமானதாகும். அப்படியில்லாமல் துயரர் வெளிப்படுத்திய நமக்கு மிகவும் பழக்கமான ஒற்றைக் மருந்துக் குறியை நாம் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு மருந்தளித்தால், அது துயரரின் குறிகளின் முழுமையை சுட்டாத போது நலமாக்கல் பகுதியாகவோ, நலமாக்கல் இன்மையோதான் நடைபெறுகிறது என்பது எனது சமீபத்திய அனுபவம்.
            சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். வெளியில் செல்லும்போது நான் எப்போதும் ஹோமியோபதி மருந்துகள் அடங்கிய சிறிய பெட்டி ஒன்றை எடுத்துச் செல்வது வழக்கம்.
            அத்திருமண விழாவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி மூட்டு வலியால் அவதிப்படுவதாக் என் மனைவீயால் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரிடம் பேசியபோது:-
            ”ரெண்டு மூனு மாசமா இரெண்டு கால் மூட்டிலேயும் வலி....”
            ”ம்.. சொல்லுங்க....”
            ”நடக்கும்போது மரமரன்னு சப்தம் கேட்குது....உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல.... உள்ள எலும்புக்குள்ள வலிச்சுகிட்டே இருக்கு...’
            ”அப்படியா...?
            ”ரெண்டு முட்டியும் அப்படியே வீங்கி இருக்கிறது மாதிரி தோனுது....”
ஆனால் அவரது கால் முட்டியில் வீக்கம் ஏதும் இல்லை...கிடைத்தது குறிமொழி என்று(!) உற்சாகமானேன். எனது மருந்துப் பெட்டியில் அகோனைட் மருந்து நிச்சயம் இருக்கும்,. எனவே Delusions, body parts are deformed என்ற குறிமொழியில் உள்ள ஒரே மருந்தான Aconite-ல்  30 வீரியத்தில் ஒரு வேளையும் மூன்று நாட்களுக்கு தொடர் மருந்துகளும் கொடுத்தேன்.
            இங்கு துயரர் வெளிபடுத்திய மற்றக் குறிகளான 1. Anger, contradiction form.
  2. Fear of Sufferings  3. Delusions, injured, is being போன்ற குறிகள் வசதியாக மறக்கப்பட்டன.
            மருந்து கொடுத்த சில நிமிடங்கள் கழித்து, அப்பெண்மணி, வீங்கினாமாதிரி இருந்தது இப்ப இல்ல.. .. ஆனா வலி இருந்துகிட்டே இருக்கு…” என்றார். “ தொடர்ந்து மருந்து சாப்பிடுங்க .. வலியும் சரியாயிடும்…..” என்ற பதில் கூறி எனது கைப்பேசி எண்னைக் கொடுத்து வந்தேன்.
            நான் எதிர்பாராத வகையில் அந்தத் துயரரிடமிருந்து மூன்று நாட்கள் கழித்து அழைப்பு வந்தது.  “ வலி அப்படியேதான் இருக்குவலிச்சுகிட்டே இருக்கு….கொஞ்சம் கூட குறையவில்லைஉட்கார்ந்தா எழுந்திருக்க முடியவில்லைநடக்கும்போதுமரமரன்னுசப்பதம் மூட்டிலிருத்து வருது….” என்றார்கூரியரில் வேறு மருந்து அனுப்புவதாகக் கூறி, சிந்தனையில் ஆழ்ந்தேன்.
            துயரர் அப்போது கூறியவற்றையும் தற்போது கூறியவற்றையும் மீண்டும் நினைவு கூர்ந்தேன்.
1. Anger, contradiction form.
                  2. Fear of Sufferings 
                 3. Delusions, injured, is being போன்ற குறிகள் அப்படியே இருந்தன.
அவசரப்பட்டு Delusions, body parts are deformed என்ற குறியின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுத்த்து பகுதியாக  அம்மனநிலையை மட்டுமே மாற்றியிருக்கிறது. துயரை முழுமையாகக் குணப்படுத்தவில்லை என்பது புலனாகிறது.
            எனவே மேற்கண்ட மூன்று குறிமொழிகளே இங்கு PPP ஆக நிலைத்துள்ளது. மேலும் அவரிடம் Carried, desire to be என்ற மனநிலையும் காணப்பட்டதால் அந்த நான்கு குறிமொழிகளையும் உள்ளடக்கிய Bryonia வில் 30ல் ஒரு வேளைக்கும் தொடர் மருந்துகள் 15 நாட்களுக்கும் அனுப்ப்பட்டன.
            நான்கு நாட்களுக்குபின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அப்பெண்மணி வலி பெருமளவில் குறைந்திருப்பதாக்க் கூறினார். துயரர் தற்போது தொடர் கண்காணிபில் உள்ளார்.

            எனவே எம்முறையை அனுசரித்து மருந்தளித்தாலும் (Classical or ROH)   துயர்க் குறிகளின் முழுமையை (Totality of Symptoms) அனுசரித்துக் கொடுக்கும் மருந்தே பூரண நலனை ஏற்படுத்துகிறது என்பதே மேற்கண்ட அனுபவம் உணர்த்துகிறது.

^^^^^%%%%%%%%%%%%%^^^^^