Saturday, April 22, 2017

ஹோமியோபதியும் அறிவியலும்

     ஹோமியோபதி அறிவியலாகுமா…..? என்ற வினா அவ்வப்போது எழுப்பப்படுவதுண்டு. அது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுக்கும்.. ஹோமியோபதியர் ஹோமியோபதிக்கு ஆதரவாகவும், அறிவியலார் எனக் கூறிக்கொள்பவர் சிலர் ஹோமியோபதிக்கு எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவு செய்வர். அத்தோடு அச்சர்ச்சை அடங்க்கிவிடும். இது ஹானிமன் அவர்கள் ஹோமியோபதியை ஒரு மருத்துவ முறையாக அறிவித்த நாள் முதல் நடைமுறையில் உள்ளது.

     இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஹோமியோபதி மருந்துகளின் ஆற்றலைக் கணக்கிடும் கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட செய்திக்ளும், ஏதோ ’பறக்கும் தட்டு பூமியில் இறங்கியது போன்ற’ ஒரு ஆதாரமற்ற செய்திகளாகவே உள்ளன. பரவலாக நடைமுறைக்கு வந்தபாடில்லை.

     இருந்தபோதிலும் ஹோமியோபதியயை அறிவியலுடன் தொடர்புபடுத்துத்தும் ஆய்வுகள் அங்கங்கே மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. அவ்வகையில் ஹோமியோபதியை நவீன அறிவியல் முறையான நானோ தொழிற்நுட்பத்துடன் தொடர்புபடுத்தி வரும் பதிவுகள் ஹோமியோபதியர்களுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளன. ‘               

சமீபத்தில் மும்பை ஐ.ஐ.டி யின் முனைவர்கள் திரு பிராஷாத் சிகர்மே, திரு. ஏ.கே. சுரேஷ், திரு. எஸ்.ஜி. கானே மற்றும் திரு ஜெயேஷ் பாலரே ஆகியோர் செய்த ஆய்வில், அதிக அளவு வீரியப்படுத்தப்பட்ட தாதுக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட  ஹோமியோபதி மருந்துகளில் ( high potency (highly diluted) homeopathic remedies made from metals) அளவிக்கூடிய அளவில் அம்மருந்துகளின் மூலப்பொருட்களின் தன்மை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்துள்ளனர்.

பொதுவக இதற்கு முன் நம் அறிவியலார் பலரும் அவகேட்ரா விதிப்படி ஹோமியோபதி மருந்துகளில் 12C வீரியங்களுக்கு மேல் உள்ள மருந்துகளில் மூல மருந்தின் மூலக்கூறுகள் ஏதும் இருக்காது என்றே சொல்லி வந்தனர். (Specifically, if the starting material is at one molar concentration (6.023x10e23 molecules per liter), then at about the 12th dilution (12C) there should be no or very nearly no molecules left of the starting material). 200c வீரியப்படுத்தப்பட்ட மருந்தில் மூல மருந்தின் மூலக்கூறுகள் இருக்கவே இருக்காது என்பது அவர்களின் வாதம்.

 ஆனால்  ஐ.ஐ.டி. பேராசிரியர்களின் எலக்ட்ரான் மைக்ராஸ்கோபி (TEM) எலக்ட்ரான் டிஃப்ராக்‌ஷன் மற்றும் அணு செப்ரோகோபி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்கண்ட அவோகேட்ரா கோட்பாட்டிற்கு முரணாக உயர் வீரிய மருந்துகளிலும் மிக நுண்ணிய மூலமருந்தின் கூறுகள் உள்ளன என்பதும் தெளிவாகிறது.(nanogram quantities of the starting material still present in these ‘high potency’).

ஹோமியோபதி மருந்துகளின் ஆற்றலை, குறிப்பக உயர் வீரிய மருந்துகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் மேற்கண்ட ஆய்வு ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படவேண்டும். ஹோமியோபதியை உணரும் அளவிற்கு அறிவியல் தற்போதுதான் வளர்ந்திருக்கிறது என்பதை நாமக்கு உணர்த்துவதாகவே இத்தகைய ஆய்வுகள் உள்ளன.

இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன், எவ்வித அறிவியல் முன்னேற்றமும் காணாத காலத்தில்  கண்டறியப்பட்ட ஒரு மருத்துவ முறை தற்போதய நவீன அறிவியலால் நிரூபிக்கப்படுகிறது. இதன் மூலமே ஹோமியோபதியைக் கண்டறிந்த மாமேதை. ஹானிமனின் அறிவுக்கூர்மையையும், தீர்க்க தரிசனத்தையும் நாம் வியக்கலாம்.
அறிவியல் காலங்காலமாக மறிக்கொண்டே வருகிறது. முன்பு சொல்லப்பட்ட கோட்பாடுகள் அடுத்தடுத்து வரும் அறிவியலர்களால் கேள்விகுள்ளாக்கப்படுகிறது. ஆனால் ஹோமியோபதி என்றும் மாறாத கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பல புதிய தொழிற் நுட்பங்களினால் ஹோமியோபதி மீண்டும் மீண்டும் நிருபிக்கப்டும் என்பதே உண்மை.

மாமேதை ஹானிமன் பிறந்த இம்மாதத்தில் (ஏப்ரல் 10) ஹானிமன் அவர்களின் கொள்கைக்கு அணி சேர்க்கும் இக்கட்டுரையை ஞானமருத்தும் இதழின் மூலம் வெளியிடப்படுவதில் பெருமை கொள்கிறேன்.

”காலங்கள் மாறும்,
காட்சிகள் மறும்,
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்..!”

            -- கவிஞர் உமர்கையம்.

 நம்பிக்கையுடன் ஹோமியோபதி பணியாற்றுவோம். உலகை நல் வழிப்படுத்துவோம்.