Friday, September 23, 2016

ஹோமியோபதி எதிர்நோக்கும் அரைகூவல்கள்

ஹோமியோபதி எதிர் நோக்கும் அரை கூவல்கள்

     ஹோமியோபதி அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே பலவித எதிர்வினைகளை சந்தித்து வந்துள்ளது. மாமேதை ஹானிமன் ஹோமியோபதியை நிலைநட்ட பட்ட துன்பங்கள் அனைவரும் அறிந்ததே. அது அத்தோடு நின்றுவிடவில்லை. தற்போதய தூய ஹோமியோபதியர் ஒவ்வொருவரும் ஹோமியோபதியின் உண்னதத்தை நிலைநாட்ட ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டுதான் உள்ளனர்!

     முதலாவதாக:, ஹோமியோபதி மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, அது அறிவியல் அல்ல, அறிவியல் விதிமுறைகளுக்கு பொருந்தாதது. ஹோமியோபதி அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால், இதுவரை அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டவை அனைத்தும் குப்பைக்குப் போய்விடும். என்பது.

     ஹோமியோபதியை அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்வதற்கு இன்னும் அறிவியல் வளரவில்லை என்பதே அதற்கான பதில். இருந்தபோதிலும் புள்ளியல் அடிப்படையில் ஹோமியோபதியை பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். மற்ற மருத்துவ முறைகள் பொய்க்கும்போது ஹோமியோபதி கைகொடுக்கிறது. நோயாளியைக் இறப்பிலிருத்து காப்பாற்றுகிறது. அது ஒன்றே தற்போதைக்கு ஹோமியோபதிக்கு இருக்கும் துருப்புச் சீட்டு.

     ஹோமியோபதியின் அடிப்படை விதியான, மருந்துகளை வீரியப்படுத்தும் தத்துவமே பலருக்கும் புரிவதில்லை.ஒரு குறிப்பட்ட நிலையிலிருந்து மட்டும் பார்த்து, புரிவதில்லை என்றால் அது தவறு எனக் கூறும் மனோபாவமே தற்கால அறிவியலரிடம் உள்ளது. நமது மருந்துகளில் 12C வீரியத்துக்குமேல் உள்ள வீரிய மருந்துகளில் மருந்தின் பருமப் பொருளே இருப்பதில்லை. (அவாகேட்ரா விதிப்படி)  எனவே அவை மருந்து இல்லாத வெற்று உருண்டைகள் என்றே பலராலும் பரிகசிக்கப்பகிறது.

     அவர்களுக்கு நாம் கூறும் பதில், ’மருந்தின் பருமப் பொருள் இல்லாத மருந்துகளே உண்மையான ஹோமியோபதி மருந்துகள்!. பருப்பொருள் வெளியில் தெரிகின்ற தாய் திரவம் போன்றவை ஹோமியோபதி மருத்துவத்தில் இரண்டாம் பட்சமே!” என்பதுதான்.

     ஹோமியோபதி மருந்துகள் வெறுமனே கடலில் பெருங்காயம் கரைப்பதைப் போன்று தயாரிக்கப்படுவதில்லை. ஒவ்வோரு வீரியமாக ஏற்றப்படுகிறது. பருப்பொருள் அல்லாத மருந்தாற்றல் சக்தி ஒவ்வோரு முறை வீரியப்படுதப்படும்போதும் கூடிக்கொண்டே வருகிறது. அப்படி தயாரிக்கப்படும் மருந்தில் மருந்து இருப்பதில்லை. மருந்தாற்றல் இருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ளாதவரை ஹோமியோபதி அறிவியல் ஆகாது. அதனால்தான் ஹோமியோபதி தத்துவங்கள் தற்கால குவாண்டம் இயற்பியலை ஒத்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

     வேண்டுமானால், ஹோமியோபதி மருந்துகளை ”மருந்துகள்” என இனி கூற வேண்டாம்  “மருந்தாற்றல்” என்றே அழைப்போம்!

இரண்டாவது: ஹொமியோபதிமருந்துக்ளின் நம்பகத்தன்மை. எந்த மருந்துக்கம்பனி முறையாக ஹோமியோபதி மருந்துகளை தயாரிக்கின்றனர். என்பதில் பலவித முரண்பாடுகள் உள்ளன. எந்த ஒரு ஹோமியோபதி மருந்தையும் அதன்மீது ஒட்டியுள்ள லேபிலைக் கிழித்துவிட்டால் அது என்ன மருந்து என்பதை எந்தமேதையாலும் கண்டுபிடிக்கமுடியாது.

     தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹோமியோபதி மருந்து (மருந்தாற்றல்!) அதன் குணமாக்கலை நிகழ்த்தாவிட்டால், அதன்  காரணம் தவறான மருந்தா?,  தவறான வீரியமா? இரண்டும் சரி என்றால் தவறான மருந்துக்கம்பனியா? என்பது விவாதத்திற்குறியது. இதற்கு விடை காண குறிப்பிட்ட சில பாரம்பரிய மருந்துக்  கம்பனிகளின் மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவதுதான் தீர்வாகும். (எ.கா Hapco – Calcutta)

மூன்றாவதாக: ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொள்பவர்கள், காபி அருந்தாலாமா? வாசனை திரவியங்களை உபயோகப்படுத்தலாமா? போன்ற பல்வேறு கேள்விகள். இதற்கான பதில், அதனைப் பயன்படுத்தும் ஹோமியோபதி மருத்துவரின் அனுபவத்தைப் பொருத்தே அமைகிறது. காபி, இறைச்சி போன்றவைகளை தவிற்கச் சொல்பவர்களும் உள்ளனர். மருந்தை காபியில் கலந்தே கொடுப்பவர்களும் உள்ளனர்!

     இப்படி எத்தனியோ அரைகூவலுக்கு மத்தியிலும் ஹோமியோபதி மனித இனத்துக்காக மட்டுமின்றி மண்ணில் தோன்றிய உயிரினங்களனைத்திற்கும் தனது சிறப்பான சேவையால் மக்கள் மனதில் கொள்ளை கொண்டுள்ளது ஆச்சரியமானதே!!!!