Friday, September 22, 2017

ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு

ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு

            ஹோமியோபதியில் மருந்து நிர்ணயம் செயும் முறை எத்தனை முக்கியமானதோ, அதே அளவு முக்கியத்துவம் பெற்றது வீரியத் தேர்வு. தொல்சீர் ஹோமியோபதியில் (Classical Homoeopathy) வீரியத்தேர்வு செய்யும் முறையை பலரும் விளக்கியுள்ளனர்.   Dr. ஸ்டூவட் க்ளோஸ் அவர்களின் The Genius of Homoeopathy  புத்தகத்தில், மருந்தின் அளவு (POSOLOGY) குறித்த மிகத் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது. அதனையே பல தொல் சீர்முறையில் ஹோமியோபதியர்களும் பின்பற்றுவதாகவே தெரிகிறது.

            ஆனால் R.O.H. முறையில் மருந்து தேர்வு குறித்து, மரு சேகல் அவர்கள் மிக அருமையான முறைகளை அறிவித்துள்ளார். மரு. சேகல் அவர்களின் ஆரம்ப புத்தகங்களில் 30C  வீரியத்தை உகந்த (Optimum)  வீரியமாகக் கருதியிருக்கிறார். என்றாலும் அவரது இறுதி கால நூல்களில்    (ROH series viii) 6C மற்றும் 3X வீரிய மருந்துகளே நோயை அதிகப்படுத்தாமல் (Disease aggravation) மாமேதை ஹானிமன் குறிப்பிட்ட ‘மென்மையான நலமாக்கலை’ ஏற்படுத்துவதாக எழுதுகிறார். மேலும் இவ்வகையில் மருந்தளிப்பதால் ROH முறைக்கே உரியதான, இயற்கையான நோய்க்கழிவு வெளியேற்றம் (Second Action) அதிகம்  துன்பப்படுத்துவதாக இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

ROH முறையை பின்பற்றி மிகச்சிறப்பாக குணமாக்கலை நிகழ்த்தி வரும் வட இந்திய மூத்த மருத்துவர் P.P. மல்ஹோத்ரா ஐயா அவர்கள், துயரருக்கேற சரியான மனநிலையை தேர்வு செய்து 1M  வீரியமே கொடுத்து வெற்றி பெருகிறார். என்றாலும் மரு. M.L.  சேகல் அவர்களின் புதல்வர்கள், தங்களின் புத்தகங்களில் உயர் வீரிய மருந்துகள் கொடுத்து, அதன் விளைவுகள் அந்த அளவுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்றே குறிப்பிடுகின்றனர்.
நாம் பயன்படுத்தும் வீரியத் தேர்வு முறைகளை, (பல மூத்த ROH மருத்துவர்கள் பின்பற்றுவது) கீழ் கண்டவாறு அமைத்துள்ளோம். பின்பற்றிப் பார்த்து ஏற்றுக் கொள்ளலாம். (”எல்லாவற்றையும் சோதித்துப் பார்…. எது சரியானதோ அதனை கெட்டியக பற்றிக் கொள்” – இ.பி. நாஷ், லைக்கோபோடியம் மருந்தைப் பற்றி எழுதும்போது!)

வீரியத் தேர்வு
1.    துயரர் – துன்பத்தை வேதனையை மையப்படுத்தினால் – குறைந்த வீர்யம் (3,6,3x,6x)
2.    வாழ்வாதாரத்தை மையப்படுத்தினால் – மத்திம வீர்யம்(30,200)
3.    தனித்துவத்தை மையப்படுத்தினால் – உயர் வீரியம்(1M.10M)

எடுத்துக்காட்டாக: ஒரு துயரர் தனது முழங்கால் வலி என்ற தொந்தரவுக்காக நம்மிடம் வருகிறார் என வைத்துக் கொள்வோம்.
1 அவர் தனது உரையாடலில் தனது கால் வலியை மட்டுமே அதிகம் குறிப்பிட்டால். அவர் தனது வேதனையை மட்டுமே மையப்படுத்துகிறார். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட  மருந்தின் குறைந்த வீர்யம் 3, 6, 6x போன்றவை முதலில் (First Prescription) கொடுக்கப்பட வேண்டும்.
2. அவர் தனது கால் வலி குறித்தும், அது தொடர்ந்தால் தன்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது போகலாம் என்பது போலவோ, கால் வலியினால் தனது  அன்றாட செயல்கள் செய்ய முடியாது போய் விடுகிறது என்பதை அவரது உரையாடல் மையப்படுத்தினால் அது வாழ்வாதாரத்தை குறிப்பிடுகின்றது. எனவெ மத்திம வீர்யம்             ( 30, 200) கொடுக்கப்பட வேண்டும்
3. அவர் தனது கால் வலியினால், தமது நடையில் மாற்றம் இருப்பதாகவும், அதனால் சமூகத்தில் தாம் வேறு விதமாகப் பார்கப்படுவதாகவும், அல்லது தனது சமூக அந்தஸ்த்து குறைந்து போகலாம் – போன்ற உணவு நிலையில் இருந்தால்  அது அவரது தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. எனவெ உயர் வீரியம் (1M, 10M)  கொடுக்கப்படலாம்.
மேற்கண்ட  குறிப்புகள் ஆலோசனைகளாக, ஆய்வுக் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். தயவு செய்து யாரும் இதனை முடிபுகளாக கருத வேண்டாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$

ஹோமியோபதி பெருமைப்பட்ட நாள்!!

ஹோமியோபதி பெறுமைப் பட்ட நாள்!

     நோபல் பரிசு பெறுவதற்கு மிகப் பெரிய போட்டி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு யாருக்கு கிடைக்கிறது என்பதில்  அதீத எதிர்பார்ப்பு இருக்கும். இறுதியில் அப்பரிசினைப் பெற்றோரை உலகம் பல வகையிலும் பாராட்டும். அவர்களைச் சான்றோர் பெருமைப்படுத்துவர். அவ்வாறே திரைப்பட உலகில் ஆஸ்கார் பரிசும். இவ்வாண்டு எந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு கிடக்க இருக்கிறது என்பதில் பலவித ஊகங்களும், ஆர்வமும் திரைத்துறையில் ஆர்வம் உள்ளோருக்கு இருக்கும்.

     அவ்விதமே, தஞ்சையில் டாக்டர் ஹானிமன் விருது யாருக்குக் கிடைக்கப்போகிறது என்ற அவா, எதிர்ப்பார்ப்பு தமிழக ஹோமியோபதியர்களிடையே இனி வரும் காலங்களில் நிலவப் போகிறது.!

ஆம்… 16.04.2017 ஹோமியோபதி தன்னைப் பெருமைப் படுத்திக்கொண்ட நாள். அந்நாளில்தான் தமிழ்கூறும் நல்லுலகின் மிக முக்கிய, மூத்த ஹோமியோபதி மருத்துவ மேதைகளுக்கு  டாக்டர் ஹானிமன் விருது வழங்கப்பட்ட நாள். முதன் முதல் ஏற்படுத்தப்பட்டு அம்மேதைகளுக்கு அவ்விருது வழங்கப்பட்டதன் மூலம் தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டது விருது!

விருதென்றால்,வெறும் பட்டயக் காகிதம் அல்ல. மாமேதை ஹானிமன் இலச்சினை பொறிக்கப்பட்ட அரைச் சவரன் தங்க மோதிரமும், அம்மேதையின் உருவம் பட்டொளி வீசும் கேடயமும், பொன்னாடையும்!! விருதுகளை பெற்றுக்கொண்ட ஹோமியோபதியின் வைரங்கள் திருவாளர்கள் கோவையைச் சேர்ந்த மருத்துவர் கி. அம்பலவாணன் ஐயா அவர்களும், பட்டுக்கோட்டை மருத்துவர் ச. சம்பத்குமார் ஐயா அவர்களும்.
விருதினை வழங்க ஏற்பாடு செய்தவர், UHRA நிறுவனர் தஞ்சாவூர் திரு. க அரங்கராசன் அவர்கள்.

உலகமே இரண்டுபட்டுக் கிடக்கிறது. தற்போதய மத்திய அரசாங்கம் செய்வது சரியென்றும், அது மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறது என்றும் விவாதிப்பவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். முதலமைச்சர் நோய்வாய்ப்பட்டு இறந்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற விவாதங்களினால் ஆகப்போவதென்ன? இவை எல்லாம் அற்ப விவாதங்கள். நாகரீக உலகில், ஒன்றுபடவே இயலாதவாறு உண்மையிலேயே பிளவுபட்டு நிற்பவர்கள், ஹோமியோபதியின் நோய்தீர்க்கும் ஆற்றலை நம்புபவர்கள் மற்றும் நம்பாதவர்கள். ஹோமியோபதியை எதிர்ப்பவர்களை பொறுத்தமட்டில், ஹோமியோபதி ஒரு போலியான மருத்துவ முட்டாள்தனம்.

அனால் ஹோமியோபதியை ஆதரிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஹோமியோபதி முலம் உலகின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அது உடல் ரீதியான துயரமாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை, சமூகம் சார்ந்த பிரச்சனைகளோ, அரசியல் அலங்கோலங்கலோ ஏன் காஷ்மீர் குழப்பங்களைக்கூட ஹோமியோபதி தீர்த்து வைக்கும் என்ற தீவிர நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர்கள். தனி ஒரு மனிதனாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அரங்கத்தினை அமர்த்தி;, அழைப்பிதழ் அனுப்பி; வந்துள்ளோர்க்கெல்லாம் சிற்றுண்டியியும்; மதிய உணவையும் வழங்கி…..அப்பப்பா…..மிகச்சிறப்பாக இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியை வடிவமைத்த திரு. க. அரங்கராசன் அவர்களும் இவ்வகையில் ஒரு ஹோமியோபதி தீவிரவாதியே! அவர் அவ்வப்போது இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது அவருக்கு ஹோமியோபதியின்பால் ஏற்பட்ட அளவிடற்கரிய பற்றையும். அவரின் தன்னலமற்ற சேவை மனப்பன்மையும் வெளிப்படுத்துகிறது.

காலை சுமார் 11 மணி வாக்கில் விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்திலே Dr. சாமுவேல் ஹானிமன் அவர்களின் 262வது பிறந்த நாள் மற்றும் ஓமியோபதி வளர்ச்சிக்கு தொண்டு செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா தொடங்கியது. விழாவிற்கு தஞ்சாவூர் உயிராற்றல் ஹோமியோ மருத்துவமனை மருத்துவர் திருமதி. Dr. P. மனோபாலா,. BHMS., அவர்கள் தலைமை தாங்கினார். Dr. S மகாலட்சுமி, BHMS அவர்கள் முன்னிலை வகித்தார். உடலியக்கம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு மு. முகமதுஅலி ஜின்னா அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

திருச்சி மனிதம் இயக்குனர் மரு. டி. சிவானந்தம் அவர்கள் தனது கருதுரையில், ”மரு—உரு” தந்து மருத்துவமானது இன்று ’மரித்து’வமாக கொடியோர்களின் கைகளில் சீரழியும் நிலையை விளக்கினார். தடுப்பூசிகள் மூலம் இன்னும் சில வருடங்களில் மக்கள் தொகை குறைப்பை ஏற்படுத்தும் வழிமுறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் அதிர்ச்சி தகவலை கூறினார். இனி மனிதவளம் தேவையில்லை, அதனால் உலகில் சுற்றுச் சூழல்தான் மாசு அடைகிறது; இயந்திரங்கள் போதுமானவை, ஏழு மனிதனில் ஒருவன் இருந்தால் போதுமானது, எனவே எதிர்காலத்தில் ஆண்களுக்கு விந்தணுக்கள் இல்லாமலும், பெண்களின் கருப்பை கர்பத்தை தாங்க இயலாததாகவும்,  தவறிப் பிறக்கும் குழந்தைகளும் நோய் எதிர்ப்பு சக்தியற்று விரைவில் மாண்டுப் போவதற்காகவும் பண முதலைகளால் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் துணையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதுதான் தடுப்பூசி திட்டங்கள் என்ற விபரங்களைக் கேட்டவர் அனைவரும் திகைப்பில் உரைந்து போயினர். அத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க ஹோமியோபதி ஒன்றே வழியாக இருக்கும் என்ற உணமையினையும் அவர் விளக்கினார்.

திருச்சியைச் சார்ந்த மரு. பி. ஸ்டெல்லா அவர்கள், இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு மரு. கி. அம்பலவாணன், அவர்களின் மருந்துகாண் ஏட்டின் மூலம் பிளம்பம் மெட்டாலிகம் என்ற ஹோமியோபதி மருந்தை தேர்வு செய்து கொடுத்து பூரண குணமடைந்த அனுபவத்தை தனது அழகான பேச்சினால் விவரித்தார். மரு. பி. மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள், ஆர்கனான் மணிமொழிகளை விரிவாகவும் கவி நயத்துடன் விளக்கினார்.. மயிலாடுதுறை மரு. ஏ.ஆர். வீரராகவன் அவர்கள் விருது பெறும் பெருமகன்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

ஏற்புரையில் மரு. சம்பத்குமார் ஐயா அவர்கள், தனது ஹோமியோபதி அனுபவங்களை நினைவு கூர்ந்தார். நிறைவாகவும்—நிறைவாகவும்! உறையாற்றிய மரு. அம்பலவாணன் ஐயா அவர்கள், ”இந்நாள் என் வாழ்வின் மறக்க முடியாத இனிய நாள்” என்றும், ஹோமியோபதி தெரிந்தவர்களை நான் ஹானிமனாகவே பார்க்கிறேன்  என்றும் கூறி மெய்சிலிர்க்க வைத்தார். உயிராற்றல் குறித்த அவரது அன்றய பதிவுகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஹோமியோபதியரும் அறிந்து கொள்ள வேண்டியவை. அவர் தனது தொண்டை நோவுக்கு பச்சை மிளகாய் (காப்ஸிகம்) எப்படி மருந்தாகியது என்பதை சுவைபட தந்து தனது உரைக்கு சுவாரஸியம் ஊட்டினார். ஆடிஸம் குறைபாடுடைய ஒரு குழந்தைக்கு, அய்யா அவர்கள் மருந்தளித்து அச்சிறுவன் எவ்வாறு தற்போது மற்றக் குழந்தைகள்  போலவே அன்றாட செயல்களைச் செய்கிறான், அதற்கும் மேலே அவனது அறிவுக்கூர்மை, எந்த வருடத்தின் நாள் சொன்னாலும் உடனே அதன் கிழமை சொல்லும் திறமை, யோகக்கலையின் அச்சிறுவனின் அலாதியான் ஈடுபாடு (சுமார் ஐந்து யோகா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நிகழ்த்தியுள்ளான்!) அவனது பாக்ஸிங் திறமை போன்றவைகளை அச்சிறுவனும் அவன் குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து நேரில் வந்து நிரூபித்தனர். பற்பல கருத்துக்கள், சுவையான செய்திகள்…. நேரம் கருதி அவர் தனது உரையை விரைவாக முடித்தது அனைவருக்கும் சிறிது வருத்தமான விஷயமே.

மரு. கி, அம்பலவாணன் அவர்களால் எழுதப்பட்ட ஆர்கனான் புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்று ஐயா அவர்கள் தனது உரையின் இடையே குறிப்பிட்டது தமிழ்நாட்டு ஹோமியோபதியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி. (நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நூல்).

திரு. வி. எஸ். பீர்முகமது நன்றியுரை வழங்க, கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மதிய உணவு வயிரார வழங்கப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் மறக்க முடியாத இனிய விழாவாக அன்றய நிகழ்வு அமைந்தது.


%%%%%%%%%%%%%%%%