ஆர். ஓ. ஹச். முறையில் வீரியத் தேர்வு
ஹோமியோபதியில் மருந்து நிர்ணயம் செயும் முறை எத்தனை முக்கியமானதோ,
அதே அளவு முக்கியத்துவம் பெற்றது வீரியத் தேர்வு. தொல்சீர் ஹோமியோபதியில் (Classical
Homoeopathy) வீரியத்தேர்வு செய்யும் முறையை பலரும் விளக்கியுள்ளனர். Dr. ஸ்டூவட்
க்ளோஸ் அவர்களின் The Genius of Homoeopathy
புத்தகத்தில், மருந்தின் அளவு (POSOLOGY) குறித்த மிகத் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது.
அதனையே பல தொல் சீர்முறையில் ஹோமியோபதியர்களும் பின்பற்றுவதாகவே தெரிகிறது.
ஆனால் R.O.H. முறையில் மருந்து தேர்வு குறித்து, மரு சேகல் அவர்கள்
மிக அருமையான முறைகளை அறிவித்துள்ளார். மரு. சேகல் அவர்களின் ஆரம்ப புத்தகங்களில்
30C வீரியத்தை உகந்த (Optimum) வீரியமாகக் கருதியிருக்கிறார். என்றாலும் அவரது
இறுதி கால நூல்களில் (ROH series viii)
6C மற்றும் 3X வீரிய மருந்துகளே நோயை அதிகப்படுத்தாமல் (Disease aggravation) மாமேதை
ஹானிமன் குறிப்பிட்ட ‘மென்மையான நலமாக்கலை’ ஏற்படுத்துவதாக எழுதுகிறார். மேலும் இவ்வகையில்
மருந்தளிப்பதால் ROH முறைக்கே உரியதான, இயற்கையான நோய்க்கழிவு வெளியேற்றம் (Second
Action) அதிகம் துன்பப்படுத்துவதாக இல்லை என்றும்
அறிவித்துள்ளார்.
ROH முறையை
பின்பற்றி மிகச்சிறப்பாக குணமாக்கலை நிகழ்த்தி வரும் வட இந்திய மூத்த மருத்துவர்
P.P. மல்ஹோத்ரா ஐயா அவர்கள், துயரருக்கேற சரியான மனநிலையை தேர்வு செய்து 1M வீரியமே கொடுத்து வெற்றி பெருகிறார். என்றாலும்
மரு. M.L. சேகல் அவர்களின் புதல்வர்கள், தங்களின்
புத்தகங்களில் உயர் வீரிய மருந்துகள் கொடுத்து, அதன் விளைவுகள் அந்த அளவுக்கு நம்பிக்கை
அளிப்பதாக இல்லை என்றே குறிப்பிடுகின்றனர்.
நாம் பயன்படுத்தும் வீரியத் தேர்வு முறைகளை,
(பல மூத்த ROH மருத்துவர்கள் பின்பற்றுவது) கீழ் கண்டவாறு அமைத்துள்ளோம். பின்பற்றிப்
பார்த்து ஏற்றுக் கொள்ளலாம். (”எல்லாவற்றையும்
சோதித்துப் பார்…. எது சரியானதோ அதனை கெட்டியக பற்றிக் கொள்” – இ.பி. நாஷ், லைக்கோபோடியம்
மருந்தைப் பற்றி எழுதும்போது!)
வீரியத்
தேர்வு
1.
துயரர்
– துன்பத்தை வேதனையை மையப்படுத்தினால் – குறைந்த வீர்யம் (3,6,3x,6x)
2.
வாழ்வாதாரத்தை
மையப்படுத்தினால் – மத்திம வீர்யம்(30,200)
3.
தனித்துவத்தை
மையப்படுத்தினால் – உயர் வீரியம்(1M.10M)
எடுத்துக்காட்டாக:
ஒரு துயரர் தனது முழங்கால் வலி என்ற தொந்தரவுக்காக நம்மிடம் வருகிறார் என வைத்துக்
கொள்வோம்.
1
அவர் தனது உரையாடலில் தனது கால் வலியை மட்டுமே அதிகம் குறிப்பிட்டால். அவர் தனது வேதனையை மட்டுமே மையப்படுத்துகிறார். எனவே
தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தின் குறைந்த வீர்யம்
3, 6, 6x போன்றவை முதலில் (First Prescription) கொடுக்கப்பட வேண்டும்.
2.
அவர் தனது கால் வலி குறித்தும், அது தொடர்ந்தால் தன்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது
போகலாம் என்பது போலவோ, கால் வலியினால் தனது
அன்றாட செயல்கள் செய்ய முடியாது போய் விடுகிறது என்பதை அவரது உரையாடல் மையப்படுத்தினால்
அது வாழ்வாதாரத்தை குறிப்பிடுகின்றது.
எனவெ மத்திம வீர்யம் ( 30, 200) கொடுக்கப்பட வேண்டும்
3. அவர் தனது கால் வலியினால், தமது நடையில் மாற்றம்
இருப்பதாகவும், அதனால் சமூகத்தில் தாம் வேறு விதமாகப் பார்கப்படுவதாகவும், அல்லது தனது
சமூக அந்தஸ்த்து குறைந்து போகலாம் – போன்ற உணவு நிலையில் இருந்தால் அது அவரது தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. எனவெ உயர் வீரியம் (1M, 10M) கொடுக்கப்படலாம்.
மேற்கண்ட
குறிப்புகள் ஆலோசனைகளாக, ஆய்வுக் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
தயவு செய்து யாரும் இதனை முடிபுகளாக கருத வேண்டாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$

